தூத்துக்குடி லீக்ஸ்:02.01.2021
தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாலிபர் கொலை - எதிரிகள் மூன்று பேர் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளமுத்துநகர், பெரிய மாதா சர்ச் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி பூபால்ராயர் மகன் கிளின்டன் (25) என்பவர் நேற்று (01.01.2021) இரவு தாளமுத்துநகர் வடக்கு கடற்கரை பகுதியில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி மேற்கொண்ட விசராணையில் கொலை செய்யப்பட்ட கிளின்டன் என்பவரும் தூத்துக்குடி சாமுவேல்புரத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் மகன் டேனியல்ராஜ்(20), தூத்துக்குடி, பூபால்ராயர்புரத்தைச் சேர்ந்த அண்டன் கோமஸ் மகன் அந்தோணிராஜ் (22) மற்றும் தூத்துக்குடி மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ஜேசு (எ) ரேவாதுரை மகன் சாண்டல் (எ) சந்தனராஜ்(40) ஆகியோரும் நண்பர்கள் என்பதும் நேற்று (01.01.2021) இரவு அவர்கள் கிளின்டன் வீட்டிற்கு வந்து மது அருந்த கூட்டிச் சென்றுள்ளனர்.
பின்னர் மதுபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் டேனியல்ராஜ், அந்தோணிராஜ் மற்றும் சாண்டல் (எ) சந்தனராஜ் ஆகிய 3 பேர் சேர்ந்து கிளிண்டனை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர். ஜெயந்தி வழக்கு பதிவு செய்து எதிரிகள் மூன்று பேரையும் கைது செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக