செவ்வாய், 19 ஜனவரி, 2021

ஏழை - எளிய குடும்பங்களின் கடன்சுமையை குறைக்கும் வகையில் திருமண உதவித்தொகையை உடனே வழங்கிட வேண்டும்... தூத்துக்குடிமாவட்ட ஆட்சியரிடம் இளஞ்சிறுத்தைகள் வேண்டுகோள்!!!

 ஏழை - எளிய  குடும்பங்களின் கடன்சுமையை குறைக்கும் வகையில் திருமண உதவித்தொகையை உடனே வழங்கிட வேண்டும்...

தூத்துக்குடிமாவட்ட ஆட்சியரிடம் இளஞ்சிறுத்தைகள் வேண்டுகோள்!!!




திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் காணொளி காட்சி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இதில் பங்கேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவித்திட்டம் உள்ளிட்ட 5-திட்டங்களின் மூலம் ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் கேட்டு சுமார் 7000-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில் இதுவரையில் வழங்கப்படவில்லை. இதனால் கடன்வாங்கி பெண்களுக்கு திருமணம் செய்துள்ள 7000குடும்பத்தினரும் கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது கொரோனா நெருக்கடியால் வருமானமின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த எளிய குடும்பங்களின் கடன்சுமையை குறைக்கும் வகையில் இப்பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கத்தை வழங்கி இக்குடும்பங்களுக்கு உதவிட வேண்டுமென காணொளி வழியாக கேட்டுக்கொண்டேன்.


சற்று நொடிகள் கலந்தாலோசித்து பதிலளித்த மாவட்ட ஆட்சியர் தரப்பினர் தற்போது திருமண உதவித்தொகை வந்துள்ளதாகவும், விரைந்து பரிசீலித்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.


இந்நிகழ்வில் முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இரகுவரன், இளஞ்சிறுத்தைகளின் மாவட்ட துணை அமைப்பாளர் இராவணன், சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலாளர் சுரேந்தர், திருச்செந்தூர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுந்தர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சு.விடுதலைச்செழியன்

தூத்துக்குடி தெற்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக