தூத்துக்குடி லீக்ஸ்: 19.01.2021
தூத்துக்குடியில் தவறவிட்ட ரூபாய் 1,50,000/- மதிப்புள்ள 5 பவுன் தாலிச் செயினை சிசிடிவி கேமரா மூலம் எடுத்தவரை கண்டு பிடித்து அவரிடமிருந்து மீட்;ட நகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உரியவரிடம் ஒப்படைத்தார் - துரிதமாக செயல்பட்டு தங்கச் செயினை மீட்ட தென்பாகம் காவல் துறையினரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா சோனகன்விளை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சம்பத்குமார்(42), இவர் கடந்த 30.12.2021 அன்று தனது தாயாரான திருமதி. இன்பமணி (75) என்பவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர்.
அங்கே இன்பமணி என்பவருக்கு ஸ்கேன் எடுக்கும்போது, ரூபாய் 1,50,000/- மதிப்புள்ள அவரது 5 பவுன் தங்கச் செயினை தவறவிட்டுள்ளார். தவறவிட்டது தெரிந்து தேடிப்பார்த்தபோது கிடைக்கவில்லை.
இதுகுறித்து சம்பத்குமார் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் . நாகராசப்பாண்டியன், தலைமைக் காவலர் மோகன் மற்றும் காவலர் ஸ்ரீதர் ஆகியோர் அரசு மருத்துவமனை சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்ததில் ஒரு நபர் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
அதை வைத்து எடுத்துச் சென்ற நபர் யார் என சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி கீழ தட்டாபாறை ஜோதி நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் ஊர்க்காவலன் (45) என்பவர் 30.12.2021 அன்று அவரது மகனுக்கு உடல்நிலைக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனை ஸ்கேன் எடுக்க வந்ததும், தவறவிட்ட தங்க தாலி செயினை எடுத்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து மேற்படி தங்கச் செயினை பத்திரமாக மீட்டனர்.
மேற்படி தங்க செயினை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று தென்பாகம் காவல் நிலையத்தில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
மேலும் சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து, துரிதாமாக செயல்பட்டு தாலிச்செயினை மீட்ட தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராசப்பாண்டியன், தலைமைக் காவலர் மோகன் மற்றும் காவலர் ஸ்ரீதர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
நிகழ்வு வீடியோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக