தூத்துக்குடி லீக்ஸ் 20.01.2021
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிடம் ரூபாய் 1,20,000/- மதிப்புள்ள 6 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்ற கொள்ளையன் சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து கைது – நகைகள் மீட்பு – துரிதமாக செயல்பட்ட ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறுக்குச்சாலையிலிருந்து ஓட்டப்பிடாரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே ஓட்டப்பிடாரம் மேலலெட்சுமிபுரம் காலணி தெருவைச் சேர்ந்த பச்சைப்பெருமாள் மனைவி திருமதி மாரியம்மாள் (40) என்பவர் கடந்த 18.01.20201 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் மாரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலிச்செயின் மற்றும் மற்றொரு 3 பவுன் தங்கச் செயினை பறித்துவிட்டு வேகமாக சென்று விட்டார்.
இதுகுறித்து திருமதி. மாரியம்மாள் தனது தஙகச் செயின்களை இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பறித்துச் சென்று விட்டதாகவும், அந்தச் செயின்களின் கொக்கி மட்டும் தன்னிடம் இருப்பதாக காண்பித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் . சங்கர் வழக்குப்பதிவு செய்து
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தார்.
அந்த ஆய்வின் மூலம் செயின்பறித்துச் சென்ற நபர் அடையாளம் காணப்பட்டு போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று (20.01.2021) காலை ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் மணிவண்ணன், சார்பு ஆய்வாளர் பொன்முனியசாமி, முதல் நிலைக் காவலர்கள் கொடிவேல், ராஜா, பாலமுருகன், காவலர்கள் திரு. பாரதிக் கண்ணன் மற்றும் திரு. கணேசன் ஆகியோர் வாலசமுத்திரத்தில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் காணப்பட்ட செயின் பறிப்பில் ஈடுபட்ட மேற்படி நபர் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.
அவரை விசாரணை செய்ததில் அவர் பூபாண்டியபுரம் வ.உ.சி நகரைச் சேர்ந்;த இசக்கிமுத்து மகன் மூர்த்தி (20) என்பவர் எனவும், அவரது இரு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் வாகனத்தின் டேங்க் பையில் செயினின் இரு முனைகளை இணைக்கும் கொக்கி இல்லாமல் இரு தங்கச் செயின்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டதில் மேற்படி தங்கச் செயின்களை மாரியம்மாள் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது பறித்துச் சென்றதாக ஒப்புக் கொண்டார்.
மேலும் வேறு யாரிடமாவது இது போன்று செயினை பறித்து கொண்டு மொத்தமாக விற்பனை செய்து பணம் எடுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மேற்படி இரு செயின்களையும் தனது இரு சக்கர வாகன டேங்க் பையில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனடிப்படையில் ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் மேற்படி மூர்த்தியை கைது செய்து, பறித்துச் சென்ற நகைகளை மீட்டு, அவர் பயன்படுத்திய இரு சக்கர வானத்தையும் பறிமுதல் செய்தனர்.
செயின் பறிப்பில் ஈடுபட்ட எதிரியை கைது செய்தும், மேலும் செயின் பறிப்பு மற்றும் திருட்டு நடைபெறாமல் துரிதமாக செயல்பட்ட மேற்படி ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் திரு. மணிவண்ணன் தலைமையிலான போலீசார் அனைவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஜெயக்குமார் பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக