தூத்துக்குடி லீக்ஸ் 31.12.2020
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட சித்த மருத்துவமனை சார்பாக சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் இன்று (31.12.2020) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
பின்பு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மருத்துவதுறையினர், அதிலும் சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் மூலம் மிகப்பெரிய பலன் கிடைத்து வருகிறது. கபசுரக் குடிநீர் குடிப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ஏதுவாக உள்ளது
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளது என்று முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்து விடக்கூடாது.
தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலை இருப்பதால் தொடர்ந்து முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தும். தகுந்த முறையில் கபசுரக் குடிநீர் அருந்துதல் ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும் என்றும் இந்த சித்த மருத்துவ கண்காட்சி மூலம் அன்றாடம் நாம் உண்ணக்கூடிய உணவுகள் பற்றியும் அதன் பயன்களை தெரிந்து கொள்ளலாம், நமது உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசெல்வி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் டாக்டர். சங்கர ராம சுப்பிரமணியன், முள்ளக்காடு ஆயுஷ் மருத்துவ அலுவலர் டாக்டர் திருமதி. திலகவதி அரியநாச்சி, உதவி மருத்துவ அலுவலர் டாக்டர். பிரீத்தா மற்றும் மருந்தாளுநர் ஞான சௌந்தரி, உதவியாளர். சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் கண்ணபிரான், ஆய்வாளர் ஜாகீர் உசேன், உதவி ஆய்வாளர் மணிகண்டன், ஈஸ்வர மூர்த்தி, நடராஜன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக