ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
புது வருடம் பிறக்கிறது என்றாலே அனைவருடைய மனதிலும் புதிய தன்னம்பிக்கை மேலோங்கும் இதுவரை சந்தித்த துன்பங்களும் துயரங்களும் புதிய வருடத்தில் நீங்காதா என்ற எதிர் பார்ப்பை உருக்கும்.
எத்தகைய சோதனைகள் வந்தாலும் தொடர்ந்து நமக்காக உழைக்கும் விவசாயிகளின் அர்ப்பனிப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை தொழில் துறை வீழ்ச்சி உள்ளீட்ட காரணங்களால் பல இலட்சக்கணகான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் தங்களது எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக்குறியுடன் காத்திருகின்றனர்.
முடங்கி கிடக்கும் சிறு குறு தொழில்களை மத்திய, மாநில அரசுகள் மீட்டுடெக்காமல் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க முடியாது. ஆளும் அரசுகளின் நடவடிக்கைககளால் மட்டுமே மாற்றத்தை ஏற்ப்படுத்த முடியும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்யவும் .
எனவே : தமிழக மக்கள் அனைவருக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக