தூத்துக்குடி லீக்ஸ்: 16.12.2020
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 எஸ்.ஐக்கள் பணியிட மாற்றம் - இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சங்கர் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறையில் பணியாற்றி வந்த வேல்ராஜ் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றி வந்த சிவக்குமார் ஆகியோர் தென்பாகம் காவல் நிலையத்திற்கும், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எபனேசர் சிப்காட் காவல் நிலையத்திற்கும், சிப்காட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பாலன் புதியம்புத்தூர் காவல் நிலையத்திற்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் முனியசாமி சூரங்குடி காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக