திங்கள், 14 டிசம்பர், 2020

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி.. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்!!! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 192 பேர் தூத்துக்குடியில் கைது!!!

 அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் டெல்லியில் போராடுகிற விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசின் அவசர சட்டங்களை வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் நல்லையா தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் இன்று 14 - 12 - 2020 காலை நடைபெற்றது.




 இந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொருளாளர் கே பி பெருமாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அழகு முத்து பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே பி ஆறுமுகம் கோவில்பட்டி விவசாய சங்கத் தலைவர் செயலாளர் லெனின்குமார் விளாத்திகுளம் விவசாய சங்க தாலுகா செயலாளர் பிச்சையா கழுகுமலை விவசாயிகள் சங்கச் செயலாளர் சிவராமன் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் அசோக் குமார் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சுப்பு துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி ஓட்டப்பிடாரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் அழகு  விளாத்திகுளம் விவசாய சங்கம் தாலுகா செயலாளர் வேலாயுதம் , ஏஐடியூசி மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்டச் செயலாளர் சந்தனசேகர், வழக்கறிஞர் ராமச்சந்திரன்மற்றும் 200க்கும் மேற்பட்ட தோழர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.  


கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது காவல்துறை காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி மறுக்கிறோம் .

ஆகவே உங்களை கைது செய்கிறோம் என்று மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களால் 192 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக