தூத்துக்குடி லீக்ஸ்:12.12.2020
நாளை(13.12.2020) நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து இரயில்வே காவல்துறை துணை தலைவர் மு.வெ. ஜெய கௌரி, இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்தலைமையில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது.
இந்த எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 13 தேர்வு மையங்களில் 3054 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 16134 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இந்த எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி மற்றும் செல்வன் ஆகியோர் மேற்பார்வையில் 11 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 55 காவல் ஆய்வாளர்கள், 180 சார்பு ஆய்வாளர்கள் உட்பட 1400 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன பணிகள், எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுரைகள் வழங்கினார்.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி கணேஷ், தூத்துக்குடி ஊரகம் பொன்னரசு, கோவில்பட்டி கலைக்கதிரவன், தூத்துக்குடி ஆயுதப்படை கண்ணபிரான், தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இளங்கோவன், மாவட்ட குற்ற பிரிவு பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு பழனிக்குமார், மாவட்;ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக