வெள்ளி, 18 டிசம்பர், 2020

மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் மீது தாக்குதல் நடத்துவேன்.? என மர்ம நபர் தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு மிரட்டல் கடிதம் திடுக் ... பரபரப்பு !!!காவல் துறை அதிரடி தேடலில் ஒருவர் சிக்கினார்!!!!

 

மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் மீது தாக்குதல் நடத்துவேன் என்று மர்ம நபர்ஒருவர் முதல்வர் பழனிசாமிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை கே.கே.நகர் 10-வது செக்டாரில் இருந்து பிரவீன்குமார் என்பவர் கடிதம் அனுப்பியுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடித்தில் இருந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது பிரவீன்குமார் எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனையடுத்து, மிரட்டல் கடிதம் அனுப்பிய நபரை செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.


மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் மீது தாக்குதல் நடத்துவேன்  என்று கடிதம் எழுதிய  விவகாரத்தில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பிரவீன் அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஆஜர்

தனது பெயரையும் செல்போன் எண்ணையும் யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்று விளக்கம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக