திங்கள், 7 டிசம்பர், 2020

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 30 அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பரபரப்பு கடிதம்.???

 


பெறுதல்

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில எதிர் கட்சிகள்.


பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தபின்பு EVM வாக்கு எந்திரம் மூலம் நடைபெறும் தேர்தல் மோசடிகள் உச்சகட்டத்தை அடைந்திருப்பது நாட்டு நடப்புகளை தொடர்ந்து கவனிக்கும் அனைவருக்கும் நன்கு தெரியும். 2019 பாராளுமன்ற தேர்தலில் மிக வெளிப்படையாகவே தேர்தல் முறைகேடுகள் பெருமளவில் நடைபெற்றன. நியாயமான முறையில் அந்த தேர்தல் நடைபெற்றிருந்தால் மீண்டும் மோடி பிரதமராகி இருக்க முடியாது. 


மத்தியில் அதிகாரங்கள் அனைத்தையும் குவித்து வைத்துக் கொண்டு தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் உட்பட அனைத்து அமைப்புகளையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளதன் மூலமே மிக சுலபமாக வாக்கு எந்திர தேர்தல் முறைகேடுகளில் பாஜக-வால் ஈடுபட முடிகிறது. 


இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் நாட்டின் ஜனநாயக அமைப்பு முறை முற்றிலும் தகர்ந்து முழுமையான சர்வாதிகார நாடாக இந்தியா மாறிவிடும். தேர்தல்கள் நியாயமாக நடைபெறாமல் இந்தியாவில் ஜனநாயகம் நீடிப்பது சாத்தியமில்லை. 


நம்பகமான முறையில் தேர்தல்கள் நடைபெற வேண்டுமென்றால் வாக்கு எந்திரத்தை தடை செய்து மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு செல்வதே ஒரே வழி. 


தொழில்நுட்பத்தில் மிக முன்னேறிய நாடுகள் கூட நம்பகத்தன்மை இல்லாத காரணத்தால் வாக்கு எந்திரத்தைப் பயன்படுத்துவதில்லை. வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல்களை நடத்துகின்றன. 


எனவே நம் நாட்டிலும் வாக்கு எந்திரத்தை(Electronic Voting Machine) தடை செய்து வாக்குச்சீட்டு(Paper Ballot) முறையில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதே நாட்டு மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது. 


தேர்தல் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு. ஆனால் மிக முக்கியமான இப்பிரச்சனையில் நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஏன் மக்களின் உணர்வை பிரதிபலிக்கவில்லை? வாக்கு எந்திரத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் ஏன் வலுவாக எழுப்பவில்லை? EVM  மோசடிகள் மூலம் பாஜக நடத்தும் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் ஏன் போராடவில்லை? என்ற கேள்விகள் நாடு முழுவதும் பெருவாரியான மக்களிடம் எழுந்துள்ளன. 


சமூக  ஊடகங்கள் மூலம் மக்கள் தங்களின் இந்த உணர்வுகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். இக்கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது என்பதை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் கவனத்துக்கு கொண்டுவருகிறோம். 


இப்படிக்கு,

ஆ.நந்தினி, 

க.ஆனந்தன், 

ஆ.நிரஞ்சனா, 

ச.குணா ஜோதி பாசு,

36, பாண்டியன் நகர்,

K.புதூர், மதுரை-7,

தமிழ்நாடு.


நாள்:07.12.2020


(குறிப்பு: காங்கிரஸ், BSP, CPI(M), CPI, தேசிய வாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், RJD, SP, TRS, PDP, NC உள்ளிட்ட 30 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக