திங்கள், 7 டிசம்பர், 2020

திருசெந்தூரில் ... இன்று பிஜேபி-யின் வேல் யாத்திரை நிறைவு விழா கூட்டத்தில் ம.பி முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்பு ...பரபரப்பு!!!

தூத்துக்குடி லீக்ஸ். -07-12-2020 

கடந்த நவம்பர் 6 - தேதி பாஜக சார்பில் திருத்தணியில் தொடங்கிய... வேல் யாத்திரை தொடங்கி ேற்று டிசம்பர் 6 - தேதி மாநில தலைவர் முருகன் தலைமையில் திருச்செந்தூர் வந்தடைந்தார்கள்.

 திருச்செ ந்தூர் கோவிலில்      இதற்காக, மாநில தலைவர் முருகன் வேல் யாத்திரையில் கொண்டுவரப்பட்ட  3 அடி கொண்ட ஐம்பொன் வேலை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தினார்.

இன்று டிசம்பர் 7-ல்  திருச்செந்தூர் கோவில் அருகில் உள்ள 

K.T.M. திருமண மண்டபத்தில் ... நடைபெற்ற பொதுகூட்டத்தில் வெற்றி யாத்திரை நிறைவு விழாவில் மத்திய பிரேதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

பாஜக தேசிய பொதுச் செயலாளரும் தமிழக பொறுப்பாளரும் ஆகிய முன்னாள் கர்நாடக அமைச்சர் 

 சிடி ரவி மற்றும் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி

மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் , பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவர் முருகன் மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.




தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக,

இந்து மதத்துக்கு எதிராக,

தமிழ் கடவுள்களுக்கு எதிராக தொடுக்கப்படுகின்ற , உருவாக்கப்படுகின்ற மோசமான பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில்

தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும் வகையிலும், கோரோனா தொற்றுநோய் காலத்தில் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து அரும்பாடுபட்டு உழைத்த சுகாதாரப் பணியாளர்கள் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையிலும்

பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்புடன் சிறப்பான முறையில் மக்கள் ஆதரவுடன் நடந்து வந்த வெற்றி யாத்திரை இன்று வெற்றிகரமாக நிறைவ டை ந்தாக தெரிவித்தார் கள்.

வேல் யாத்திரை தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த   போவதாக மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.

thoothukudileaks

முக்கிய குறிப்பு:-

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை லட்சகணக் கோர் கூடும் திருசெந்தூர் சூரம் சம்ஹாரம்  குலசை முத்தாரம்மன்  திருவிழா வின் பேரது பக்தர்கள் மற்றும் ெபாதுமக்கள் இடம் கையாண்ட சிறப்பான உத்தியை ... தற்போது இந்த விஷயத்திலும் மிக சிரமத்துடன் சிறப்பாக கையாண்ட விதம் பற்றி பொதுமக்கள் மத்தியில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையை பாராட்ட  வைத்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக