திங்கள், 7 டிசம்பர், 2020

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று குறைகளை கேட்டு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்திய ... தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ.!!!!

 


      தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ.குறைகளை கேட்டு, சீரமைப்பு பணிகளை துரிதபடுத்தினார்.

"

      தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக கனத்த மழைத்த பெய்து தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளநீர் வீடுகளை சூழ்ந்தது.

      தூத்துக்குடி மாநகராட்சி மழைவெள்ளம் சூழ்ந்தமக்கள் குடியிருப்பு பகுதிகளான டி.எம்.எஸ் நகர், சின்னகண்ணு புரம், தேவர் காலனி, குறிஞ்சி நகர், தனசேகரன் நகர், போல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், தூததுக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ.வீடு, வீடாக சென்று பார்வையிட்டு மக்கள் குறைகளை கேட்டார், அது போல் மழை வெள்ளநீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க உடன் வந்த மாநகராட்சி அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.      தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் செய்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை யும் பார்வையிட்டார்.எம்.எல்.ஏ.கேட்டுககொண்டதன்பேரில் பெரிய மோட்டார் இஞ்சின் மூலம் மழைநீர் அகற்றப்பட்டது. எம்.எல்.ஏ யுடன்தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையர் தனசிங், இளநிலை பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர். தனராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே பிரபாகர், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாநகரப் பகுதி கழக செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளரும்,மாவட்ட கவுன்சிலகுமானஅழகேசன், மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் செரினா முன்னாள் நகராட்சி சேர்மன் மனோஜ் குமார்,  மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் வக்கீல் முனியசாமி, துணை செயலாளர் வக்கீல் சரவணபெருமாள், , தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சகாய ராஜா, வட்டக் கழக செயலாளர்கள் கொம்பையா, எஸ்.கே. முருகன், அருண்ராஜா, மகேஷ், பகுதி இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கள் சாம்ராஜ், நிலா சந்திரன் பாலஜெயம் உட்பட பலர் பங்கேற்றனர். 

👍




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக