ஞாயிறு, 20 டிசம்பர், 2020

தலித் மக்களுக்கு இழைத்துவரும் அநீதிகளைக் கண்டித்து இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் 21-12-2020 அன்று தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தோழர் விடுதலைச்செழியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் !!!

 தலித் மக்களை வஞ்சிக்கும் அதிமுக அரசைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளஞ்சிறுத்தைகள் ஆர்பார்ட்டம்


அதிமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி கொஞ்சநஞ்சமல்ல. 

போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான நிதியைக் குறைத்து பல்லாயிரக்கணக்கான தலித் மாணவர்களின் உயர்கல்வியைப் பறித்தது;  அமைச்சரவையிலும் நிர்வாகத்திலும் ஆதிதிராவிடர்களைத் தொடர்ந்து புறக்கணித்துவருவது;  தலித் மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தாமலும், ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்தாமலும் வேடிக்கை பார்ப்பது ; சென்னை உயர்நீதிமன்றம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டும் மாநில எஸ்சி ஆணையத்தை இதுவரை அமைக்காமல் இழுத்தடிப்பது;  பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிகளிலும் பஞ்சாயத்து செயலர் பதவிகளிலும் எஸ்சி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது; அதனால் தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் செயல்பட விடாது  முடக்கப்படுவதற்கு மறைமுகமாகத் துணைபோவது; மனுஸ்மிருதியில் இருப்பதை மேற்கோள்காட்டியதற்காக தலைவர் திருமாவளவன் அவர்கள் மீது அவசர அவசரமாக  பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தது;  

ஆனால் நூற்றுக்கணக்கில் புகார் கொடுத்தும் கூட வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பினர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைப் பாதுகாப்பது; அரசுப்பணிகளில் ஆதிதிராவிட மக்களுக்கான இடங்களை சரிவர நிரப்பாமல் வஞ்சிப்பது;  ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்குவதில் கூட பாரபட்சம் காட்டுவது ; பஞ்சமி நிலம் இரண்டரை இலட்சம் ஏக்கர் கண்டறியப்பட்ட பிறகும்கூட அதை உரியவர்களுக்கு வழங்காமல் காலம் தாழ்த்துவது.

இதுபோன்று அதிமுக அரசு தொடர்ந்து தலித் மக்களுக்கு இழைத்துவரும் அநீதிகளைக் கண்டித்து இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் எதிர்வரும் 21-12-2020 அன்று தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தோழர் விடுதலைச்செழியன் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது    இவண்  

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக