தூத்துக்குடி லீக்ஸ் :20.12.2020
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் வரலாற்றுப் பதிவேட்டு குற்றவாளிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் விசாரணை செய்தார்.
இதுபற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும், ரவுடிகளை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அமைதியை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள 56 காவல் நிலையங்களிலும் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, ரவுடித்தனம் உட்பட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மீது அந்த காவல் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் வரலாற்றுப்பதிவேடு குற்றவாளிகளை காவல் நிலைய அதிகாரிகள் அவ்வப்போது தணிக்கை செய்து, அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் இதில் தனிக்கவனம் செலுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வரலாற்றுப்பதிவேட்டு குற்றவாளிகளையும் தினம்தோறும் நேரில் விசாரணை செய்து வருகிறார். அதன்படி நேற்று 10 பேரையும், இன்று 6 பேரையும் நேரில் விசாரணை செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக