ஞாயிறு, 29 நவம்பர், 2020

பாரதீய ஜனதா கட்சியைத் தடை செய்ய வலியுறுத்தி இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை திருச்செந்தூரில் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம்!!!

திசம்பர் 05
திருச்செந்தூரில் 

நாட்டை பதற்றத்திலேயே வைத்திருக்கும் பாஜக- வை தடை செய்யக்கோரி இளஞ்சிறுத்தைகள் போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.
இது பற்றி செய்தி யாவது:-

நாடெங்கும் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரம் செய்தும், மக்களிடையே சாதி - மதவெறியைத் தூண்டி வன்முறையை உண்டாக்கி நாட்டை பதற்றத்திலேயே வைத்திருக்கும் பாரதீய ஜனதா கட்சியைத் தடை செய்ய வலியுறுத்தி இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் எதிர்வரும் 05-12-2020 சனிக்கிழமையன்று காலை 10-மணி முதல் மாலை 05-மணி வரை திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் வைத்து எனது தலைமையில் மாபெரும்  உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற உள்ளது.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கித் தந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு நேரெதிரான மனுஷ்மிருதியை மறைமுகமாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து மக்கள் விரோத செயல்திட்டங்களில் மட்டுமே ஈடுபட்டு வரும் பாஜக வை தடை செய்தால் மட்டுமே இந்தியாவின் பன்முகத்தன்மையையும், சனநாயகத்தையும் பாதுகாக்க முடியும்.

அதற்காக அணிதிரள்வீர்!

இவண்

சு.விடுதலைச்செழியன் 
மாவட்ட அமைப்பாளர் - இசிஎபா 
விசிக - தூத்துக்குடி தெற்கு

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக