தூத்துக்குடி லீக்ஸ் 29 - 11 - 2020
தூத்துக்குடி பானுபிருந்தாபவன் மண்டபத்தில் இன்று காலை 11 மணி அளவில் நடை பெற்ற தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி பூத் குழ ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மா.செ. எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ.பேசியதாவது:-
அதிமுக-வினர் தேர்தல் பணியில் அதிக முனைப்பு காட்டி பூத் - களில் தேர்தல் களத்தில் நாம் துணிச்சலாக செயல் பட வே ண்டும். வெற்றி மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல் பட வேண்டும் என மகளிர் அணி மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுச்சி யுடன் உரையாற்றினார்.
பின்பு இக்கூட்டத்தில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
தீர்மானம்: 1
தேர்தல் பணிகளில் கழக மகளிர்களுக்கு பூத்களில் பணியாற்ற
வாய்ப்பு வழங்கிய கழக ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழக
நிரந்தர முதலமைச்சர் டாக்டர் எடப்பாடியார் அவர்கள், துணை
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஆகியோருக்கு இக்கூட்டம்
தன்நெஞ்சார்ந்த
நன்றியையும் பாராட்டுதலையும்
தெரிவித்துக்கொள்கிறது
தீர்மானம்: 2
தூத்துக்குடியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கிவைக்க
வருகை தந்த மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்கள்
தூத்துக்குடி சுந்தர் நகரை சார்ந்த மாரீஸ்வரி (மாற்றுதிறனாளி) மனு
கொடுத்த ஒரு மணி நேரத்தில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி
முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ்புற
ஆதாரமுறையில் வார்டு மேலாளர் பணியை வழங்கி, பெண்
இனத்தை காப்பாற்றியமைக்கு இக்கூட்டம் தன் நன்றியையும்
பாராட்டுதலையும் பணிந்து தெரிவித்துக்கொள்கிறது
தீர்மானம்: 3
அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம்
பயில 7.5% இடஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தோடு
அவர்களின் கல்வி செலவையும் அரசே ஏற்கும் என அறிவித்த
மக்களின் முதல்வர் எடப்பாடியாருக்கு இக்கூட்டம் நன்றியை
பணிந்து சமர்பிக்கிறது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இதயதெய்வம் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் ஆகியோர் நல்லாசியோடு கழக ஒருங்கிணைப்பாளர்கள்
மாண்புமிகு தமிழக நிரந்தர முதல்வர் டாக்டர்.எடப்பாடியார் அவர்கள்,
மாண்புமிகு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் ஆகியோர்
ஆணைக்கிணங்க, கழக பூத்- மகளிர் குழு அமைப்பது குறித்த தூத்துக்குடி
தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணி ஆலோசணைக்கூட்டம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்
எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் 29.11.2020
ஞாயிற்றுகிழமை) காலை 11.00 மணியளவில் தூத்துக்குடி பானு பிருந்தாவன்
ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்வில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட
கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக