திங்கள், 30 நவம்பர், 2020

ஜாதி மோதலை தூண்டும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை.!!! ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசியவர் மீது சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு!!! !

 தூத்துக்குடி மாவட்டம்:30.11.2020




சிப்காட் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசியவர் மீது சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.


ஜாதி மோதலை தூண்டும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா, தருவைக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  மகாராஜன் என்பவர் மீன்பிடித்தொழில் செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சனை சம்மந்தமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 28.11.2020 அன்று மனு கொடுக்க வந்தவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார், 



அந்த பேட்டியில் ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து மீளவிட்டான் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 இது போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசினாலோ அல்லது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற செய்திகளை ஆடியோ, புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணைத்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் வெளியிட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக