தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகை!!! ...இளஞ்சிறுத்தைகள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நவம்பர் 11
தூத்துக்குடி
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று பின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் 3-கோரிக்கை மனுக்களை மின்னஞ்சல் (E Mail) வழியாகவும், பகிரி வாட்ஸ்அப் வழியாகவும் அனுப்பியுள்ளோம்.
முதல் மனு -
தமிழக முதல்வர் நிவாரண நிதி கோருதல்.
16-12-2019 அன்று ஆறுமுகநேரி அருகே வாகனம் மோதி உயிரிழந்த துப்புரவு பணியாளர் கோமதி மற்றும் படுகாயமடைந்த ஜெயலட்சுமி ஆகியோர் குடும்பத்திற்கும்,
2020, சூலை மாதத்தில் உடன்குடி அருகே சிவலூரில் பதனீர் எடுக்க பனையில் ஏறியபோது தவறி விழுந்து உயிரிழந்த பனையேறும் தொழிலாளி வடிவேலுவின் குடும்பத்திற்கும், 2020- சூலையில் வெள்ளாளன்விளை அருகே ஒரு தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது கம்பத்தில் தொங்கியபடியே உயிரிழந்த பரமன்குறிச்சி மின்வாரியத்தின் மின்வட்ட கம்பி ஒப்பந்த பணியாளரான இராதாகிருஷ்ணன் குடும்பத்திற்கும்
தமிழக முதல்வர் நிவாரண நிதியை வழங்கிட கேட்டு மனு.
இரண்டாவது மனு -
வேலைவாய்ப்பு
உடன்குடி அனல்மின் நிலையப் பணிகளில் (ஒப்பந்த பணிகளையும் சேர்த்து) சுற்றுவட்டாரப் பகுதி இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கிடல். வெளிமாநிலத் தொழிலாளர்களை வெளியேற்றுதல்.
மூன்றாவது மனு -
கந்தசஷ்டி, தீபாவளியை முன்னிட்டு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிடல்.
திருச்செந்தூர் முருகன் கோவிலை நம்பி வாழும்தொழிலாளர்களை கோவிலைச் சுற்றி தொழில் செய்ய அனுமதித்திடல்.
முருகன் கோவில் பணியாளர்களை சாதிய நோக்குடன் தொடர்ந்து தாக்கிவரும் பார்ப்பனர்கள் மீது உரிய நடவடிக்கை - கோவிலுக்குள் அனுமதித்தல் கூடாது.
10-ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலில் பணி செய்யும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களை நிரந்தர பணியாளர்களாக்கிட அரசாணை.
திருக்கோவில் செயல் அலுவலராக மீண்டும் ஓர் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தல்.
திருச்செந்தூர் - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் மக்களுக்கு இடையூறாக இயங்கிவரும் டாஸ்மாக் கடயை இடம் மாற்றுதல்.
திருச்செந்தூரில் முறையான கட்டிட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள தனியார் விடுதிகளுக்கு சீல் வைத்தல் ஆகியவை.
இப்பணியின்போது முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் இரகுவரன் மற்றும் கட்சியின் சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலாளர் தோழர் சுரேந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.
இவண்
சு.விடுதலைச்செழியன்
மாவட்ட அமைப்பாளர் - இசிஎபா
விசிக - தூத்துக்குடி தெற்கு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக