செவ்வாய், 10 நவம்பர், 2020

தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ வருகை!!! தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள்‌ மற்றும்‌ கொரோனா நோய்‌ தடுப்புபணிக்‌ குறித்து ஆய்வு!!! புதிய திட்ட பணிகளுக்குஅடிக்கல்‌.. நலத்திட்ட..உதவி வழங்கல்!!!

 தூத்துக்குடி மாவட்டத்திற்கு  தமிழ்நாடு முதலமைச்சர்‌ இன்று காலை 11-11-2020 இன்று வருகை....தூத்துக்குடி மாவட்ட அதிமுக-வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

 தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள்‌ மற்றும்‌ கொரோனா நோய்‌ தடுப்புபணிக்‌ குறித்து ஆய்வு!!! புதிய திட்ட பணிகளுக்குஅடிக்கல்‌.. நலத்திட்ட..உதவி வழங்கப்பட்டது.








தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌.

இன்று (11.112020) வருகை தந்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக

கூட்டரங்கில்‌ மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள்‌ மற்றும்‌ கொரோனா நோய்‌ தடுப்பு

பணிகள்‌ குறித்து ஆய்வு நடத்தினார்.


 முன்னதாக தூத்துக்குடி அரசு

மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்‌ புற்றுநோய்‌ சிகிச்சை பிரிவிற்கு ரூ.16

கோடி மதிப்பிலான மருத்துவ நேரியல்‌ முடுக்கி கருவியினை வழங்கினார்.


மேலும்‌ தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்‌ ரூ.7151 லட்சம

மதிப்பிலான மத்திய ஆய்வக புதிய கட்டிடத்தினை திறந்து வைக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ பொதுப்பணித்துறை

 நீர் வள ஆதாரத்துறை காவல்‌ துறை, தீயணைப்பு மற்றும்‌ மீட்பு பணிகள்‌ துறை,

பள்ளி கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர். வழங்கல்‌ துறை,

மீன்வளத்துறை, மக்கள்‌ . நல்வாழ்வு மற்றும்‌ குடும்ப. நலத்துறை,

போக்குவரத்துத்துறை _ உள்ளிட்ட _ துறைகளின்‌ சார்பில்‌ ரூ.29:37 கோடி

மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.


மேலும்‌, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, காவல்‌ துறை,

கருவூலம்‌ மற்றும்‌ கணக்குத்துறை, பள்ளி கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம்‌.

மற்றும்‌. குடிநீர் வழங்கல்‌துறை, மீன்வளத்துறை, வேளாண்மைத்துறை,

தோட்டக்கலைத்துறை, செய்தி மற்றும்‌ மக்கள்‌ தொடர்புத்துறை, வருவாய்‌ பேரிடர்‌.

மற்றும்‌ மேலாண்மமைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, பிற்படுத்தப்பட்டோர்‌

மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை உள்ளிட்ட துறைகளின்‌ சார்பில்‌ ரூ 3285

கோடி மதிப்பிலான 29 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல்‌ நாட்டினார்.



தொடர்ந்து பயனாளிகளுக்கு இலவச... வீட்டுமனைப்பட்டா, அம்மா

இருசக்கர வாகன மானியம்‌, ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ்‌ கொரோனா சிறப்பு

நிதியுதவி, டிராக்டர்‌ மற்றும்  பவர்‌: டில்லர்‌ கடன்‌ உதவி, பசுமை வீடுகள்‌,

தொழில்முனைவோர்‌ திட்டத்தின்‌ கீழ்‌ கடன்‌ உதவி, பொருளாதார கடன்‌ உதவி

உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள்‌ 15792 பயனாளிகளுக்கு ரூ.3765

கோடி மதிப்பினான. நலத்திட்ட உதவிகளை வழங்கும்‌ வகையில்‌ ஒரு சில

பயனாளிகளுக்கு மேடையில்‌ வழங்கினார்.


 மேலும்‌ குறு சிறு மற்றும்‌

நடுத்தர தொழில்‌ கூட்டமைப்பு நீர்வாகிகள்‌, விவசாய பற்றும்‌ மீனவர்‌ சங்க

பிரதிநிதிகள்‌ மற்றும்‌ மகளிர்‌ சுய உதவிக்குழுவினருடன்‌ கலந்துரையாடினார்


 அடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். 

 தூத்துக்குடி மாவட்டத்தின்‌ வளர்ச்சிக்காக பல்வேறு.

புதிய அறிவிப்புகளையும்‌ வெளியிட்டார்.


இந்நிகழ்ச்சியில்‌ மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌.

கடம்பூர்‌ செ.ராஜூ  மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்

குடும்பநலத்துறை அமைச்சர்‌ விஐயபாஸ்கர்‌  அரசு செயலர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சந்திப் நந்தூரி, மற்றும் சட்டமன்ற

உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் மற்றும்‌ முக்கிய பிரமுகர்கள்‌, அலுவலர்கள் பங்கேற்றார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக