புதன், 4 நவம்பர், 2020

ஆட்டோ தொழிலாளி மனைவி தங்கள் குடும்பத்தை அரிவாள் கத்தி ஆயுதங்கள் உடன் தாக்குதல்!!!! ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுமாறு கண்ணீர் கதறல்!!! தூத்துக்குடி வழக்கறிஞர் உட்பட 9 பேர் மீது தூத்துக்குடி S.P.இடம் புகார் பரபரப்பு!!!

 தூத்துக்குடியில்

ஆட்டோ தொழிலாளி மனைவி தங்கள் குடும்பத்தை அரிவாள் கத்தி ஆயுதங்கள் உடன்  தாக்கியதாக காப்பாற்றுமாறு  கண்ணீர் கதறல்!!!  தூத்துக்குடி வழக்கறிஞர்  உட்பட 9 பேர் மீது தூத்துக்குடி S.P.இடம் புகார் பரபரப்பு!!!








தூத்துக்குடியில் சமீபகாலமாக தொடர்ச்சியாக ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் முன்விரோத பகையினால் பழிவாங்கும் கொலை  கள் ஈடுபட்டு வருவதும் தூத்துக்குடியில் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றது. 

இதனால் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொலை குற்றச் செயல்கள் ஈடுபவர்கள் யாராக இருந்தாலும்  அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதும் இரவு நேரங்களில் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் மாநகரம் மாவட்டம்முழுவது திலும் ரோந்து பணியிலும் குற்றச்செயல்களை தடுக்கும் பணியில் மும்பரமாக இறங்கியுள்ளார்.


இந்நிலையில்

தூத்துக்குடி சோட்டையன் தோப்பு ஆட்டோ ஒட்டுனர் செல்வகுமார் மனைவி தேவி என்பவர் தாக்குதலால் அரசு மருத்துவமனையில் சிகிழ்ச்சை பெற்றவர் செய்தியாளரை சந்தித்தார்.

அவர் கூறியதாவது:


தூத்துக்குடி சோட்டையன் தோப்பு பகுதியில் வசித்து வருவதாகவும்.. தனது வீட்டு வாசல் முன்பு இருந்த கோழி வளர்ப்பு கூடு இருந்தது அதை வக்கீல் சின்னத்துரை உறவினர்கள் கணேசன், மூனிஷ், மணிகண்டன், பிரேம் பாலா ஆகியோர் எங்களது கோழிகூண்டை தூக்கி எறிந்துவிட்டு தனியாக இருந்த என்னை வீடுபுகுந்து தாக்கினார்கள். 

இது பற்றி 09-09-2020 அன்று தூத்துக்குடி தாளமுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். (புகார் ரசிது எண் 402/2020)

அவர்கள் போதிய கவனம் செலுத்தவில்லை மீண்டும். மீண்டும் பிரச்சினை செய்தார்கள். இதனால் வேறுவழியின்றி தூத்துக்குடி எஸ்.பி அவர்களிடம் 28-09-2020 அன்று புகார் மனு கொடுத்தேன்.

கடந்த 02 - 11-2020 அன்று இரவு 8 மணிக்கு கையில் கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் எனது வீட்டு முன்பு 9 பேர் நின்றனர் மாறி மாறி புகார் கொடுக்கறியா ? இவங்கள வெட்டுங்க என கத்தினார்கள்.

ஒருத்தன் எனது கழுத்தில் அரிவாளை வைத்து செத்துபோடி என நோக்கி வெட்டினார் உடனே எனது கணவர் கைகளால் தடுத்தினால் எனது கணவரது கைவிரல் வெட்டு காயம் ஏற்பட்டது உடன் வந்தவர்கள் எனது பாட்டி, அததை ஆகியோரை கத்திவைத்து தாக்கினர் நாங்கள் கூச்சல் போட்டதும் எனது அத்தை 100-க்கு போன் பண்ணியதும் போலீஸ் வந்து விடும் என பயந்து அங்கிருந்த காரை கட்டி கற்களை எங்கள் மீது வீசினார்கள். ஆழமான ரத்தகாயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிழ்ச்சை பெற்று கொண்டிருக்கிறோம் எனது கணவர் மட்டும் தடுத்து இருக்காவிட்டால்  நான் செத்துபோயி இருப்பேன் .


 தூத்துக்குடி எஸ்பி அவர்கள் தான் எங்களை தாக்கிய 9 பேர்கள் மீது வழக்குபதிந்து தக்க நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்றுமாறு கேட்டுகொள்கிறேன்.

இவ்வாறு கூறினார்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக