சனி, 7 நவம்பர், 2020

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றுக்கான பிசிஆர் ஆய்வகம் திறப்பு... தூத்துக்குடி அரசு மருத்துவமனை 2 லட்சத்துக்கும் மேலான டெஸ்ட் எடுக்கப்பட்டு சாதனை !!!!

 





1) நவீன லமினர் காற்று எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அரங்கம் 


இதன் மூலம் எந்த ஒரு பாக்டீரியா வைரஸ் மற்றும் தூசி துகள்களையும் பிரித்தெடுத்து அறுவை அரங்கத்தில் இருந்து வெளியேற்ற படுவதால் கிருமி மற்றும் நோய் தொற்றும் இல்லாத அறுவை சிகிச்சைகள் நடைபெற உதவியாக இருக்கும்


நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை கருவிகள் முழங்கால் மூட்டுகள் மற்றும் தசை நார்கள் சேதமாகி இருந்தால் அதனை நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யும் நவீன கருவிகள் இதற்கான மதிப்பு 54 லட்சம் ரூபாய். 


2) தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றுக்கான  பிசிஆர் ஆய்வகம்  அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜு மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

 இதில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் அவர்களுடைய முயற்சியால் இன்று வரை 2 லட்சத்துக்கும் மேலான டெஸ்ட் எடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.


3) எமது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையத்தின் சார்பாக ஆறு குழந்தைகளுக்கு பிறவியிலே உள்ள இருதயக் கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டு எமது கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் அவர்களின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 15 லட்சம் செலவில் ஆன இருதய அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக