செவ்வாய், 20 அக்டோபர், 2020

தூத்துக்குடி மீளவிட்டான் காட்டுப் பகுதியில் இன்று காலை ஒருவர் கொலை!!! சம்பவ இடத்திற்கு நேரில்...சென்று தூத்துக்குடி S.P.விசாரணை!!!

தூத்துக்குடி லீக்ஸ் 20-10-2020


 சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீளவிட்டான் காட்டுப்  பகுதியில் இன்று காலை ஒருவர் கொலை - சம்பவ இடத்திற்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

 தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீளவிட்டான் காட்டுப் பகுதியில், தூத்துக்குடி மில்லர்புரம் கணேசன் நகர் N.G.O காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கதிரேசன் (30) என்பவர் இன்று (20.10.2020) காலை மர்ம நபர்களால் அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டு  கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தூத்துக்குடி ஊரக உட்கோட்ட  துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு    விமலா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சங்கர்,பாலன் உள்ளிட்ட காவல்துறையினர் அடங்கிய  தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக