தூத்துக்குடி லீகஸ் 21-10-2010
தூத்துக்குடி ராஜ் மஹாலில் காவல்துறை - வியாபாரிகள் சங்க நல்லிணக்க கூட்டம் நேற்று (20.10.2020) மாலை 7 மணி அளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும் போது,....
நமது உடம்புக்கு முதுகெலும்பு எப்படி முக்கியமானதாக உள்ளதோ, அதே போன்று ஒரு நகரத்தின் முதுகெலும்பு வியாபாரிகள் ஆகும் ஒரு நகரம் எப்படிப்பட்ட நகரமாக இருக்க வேண்டும் அல்லது இருக்கின்றது என்பதை காட்டுவதில் முக்கியபங்கு அங்கு இருக்கக்கூடிய வியாபாரிகள் தான் என கூறுகிறேன்.
போக்குவரத்திலிருந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரை நமக்கு முறையாக தகவல் சொல்லி ஒத்துழைப்பு கொடுப்பவர்களும் வியாபாரிகள் தான்.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் காவல்துறைக்கும் ஒரு நல்ல இனக்கமான சூழல் இருக்க வேண்டும் என்பதற்காகதான் ஒவ்வொரு ஊரிலும் காவல்துறை - வியாபாரிகள் சங்க நல்லிணக்க கூட்டம்; நடத்தி வருகிறோம்...
இந்த கூட்டத்தில் காவல்துறைக்கு பல கோரிக்கைகள் வியாபாரிகள் தரப்பில் வைத்துள்ளீர்கள், அவற்றை பரிசீலனை செய்து உங்களுக்கு நல்ல தீர்வு வழங்கப்படும். காவல்துறைக்கு எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்
அதே போன்று.... தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாங்களும் உங்களிடம் 3 கோரிக்கைகள் வைக்கிறோம்.
அந்த கோரிக்கை பொது நலம் சார்ந்ததுதான்
அதில் ஒன்று என்னவென்றால் நீங்கள் உங்கள் ஒவ்வொருவரும் கடையின் வெளிப்பக்கமும் ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தி தெரு தெரியுமாறு வையுங்கள்.
அவ்வாறு வைப்பதன் மூலம் அந்த தெரு முழுவதும் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். சிசிடிவி கேமரா பொருத்துவது மிகப்பெரிய பலன் ஒன்று குற்றம் நடக்காமல் தடுப்பது, மற்றொன்று நடந்த குற்றத்தை எளிதாக கண்டு பிடிக்கவும், உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கவும் உதவுகிறது.
இரண்டாவது உங்கள் கடைக்கு வருபவர்களை முகக்கவசம் அணிவதற்கும், சமூக இடைவெளி கடைபிடிப்பதற்கும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தவும் வலியுறுத்துங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவலில் இருந்து நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் காப்பாற்ற முடியும். இதன் தாக்கம் இன்னும் 2 ஆண்டுகள் வரை கூட இருக்கலாம் அதுவரை தமிழக அரவு விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்
மூன்றாவதாக சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும், உங்கள் கடைக்கு வருபவர்களின் வாகனங்களை காவல்துறையினர் வாகனம் நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனத்தை நிறுத்துமாறு வலியுறுத்துங்கள். இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சென்று வருவதற்கு ஏதுவாக இருக்கும்.
அதே போன்று இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள், நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து செல்லுங்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி நகர மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ராஜலிங்கம், வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் பொன் தினகரன், தெர்மல் ராஜா, தூத்துக்குடி புதிய பேருந்துநிலையம்சங்க செயலாளர் சிங்கமணி, பொருளாளர் தளபதிஜெபஸ்டியான், வ.உ.சி மார்க்கெட் சங்க செயலாளர் செந்தில்குமார், ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தலைவர் செந்தில் ஆறுமுகம், செயலாளர் பாலமுருகன், அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க நிர்வாக செயலாளர் மாரியப்பன், ஜவுளி ரெடிமேட் வியாபாரிகள் சங்கம் சார்பில் தெய்வநாயகம், அபிராமி சந்திரசேகரன், தூத்துக்குடி மாநகர வியாபாரிகள் சங்க செயலாளர் வேலுச்சாமி உட்பட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், உதவி ஆய்வாளர் ராஜாமணி ஆகியோர் செய்திருந்தனர். போக்குவரத்துப்பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி பற்றிய வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது
முழு வீடியோ பாருங்க




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக