புதன், 7 அக்டோபர், 2020

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் உயிருக்கு உயிராக காதல் செய்து கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடி!!!பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு....கொலை செய்து விடுவார்கள் என உயிர் பயத்தில் காவல் துறையில் தஞ்சம்? அங்கோ...நீதி கிடைக்கவில்லை? காவல் அதிகாரிகள் மிரட்டல் பெண் மட்டும் ஹோமில் அடைப்பு !!! தமிழக முதலமைச்சர் காப்பாற்றுவார்? என அவருக்கு அவசர புகார் மனு!!!

 



தமிழக முதலமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கண்ணீருடன் பாதிக்கபப்ட்ட பெண் நந்தினி கூறியிருப்பதாவது:-


நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் காயல்பட்டினம் லெட்சுமிபுரம். எனது தகப்பனார் பெயர் லோகநாதன்.

நான் கடந்த 9 ஆண்டுகளாக முக்காணியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் G முத்துராஜா (வயது 21) என்பவரை காதலித்து வந்தேன். இந்நிலையில் எங்களது காதல் குறித்து எனது பெற்றோர்களுக்கு தெரிய வந்ததால்...எனது பெற்றோர்கள் எனது விருப்பத்திற்கு மாறாக எனது உறவினர் மகேஷ் என்பவருக்கு என்னை இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள்.

நான் இந்து நாடார் பிரிவை சேர்ந்தவள். காதலித்து வந்த முத்துராஜா இந்து பறையர் பிரிவை சேர்ந்தவர். எனவே எனது பெற்றோர் மாமா முத்துக்குமார், அண்ணன் முத்துராஜ் ஆகியோர் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே நான் எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் வருகின்ற 10 -10 -2020- அன்று எனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள்,

எனவே நான் வேறு வழி இல்லாமல் எனது வீட்டிலிருந்து...தப்பித்து 9 வருடமாக (அதாவது 11 வயதில் இருந்து தற்போது வயது 20 ஆகிறது.) வந்த முத்துராஜா என்பவரை 05-10 - 2020 அன்று அழைத்து சென்று குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன கோவில் வைத்து....காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டேன்.

இதை அறிந்த எனது உறவினர்கள் என்னையும் திருமணமான எனது கணவர் முத்துராஜாவையும் கொலை செய்யும் எண்ணத்துடன் சுற்றி வந்தனர். நான் இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களிடம் புகார் கொடுத்தேன்.

அந்த புகார் மனு எண்: 2440/2020 ஆகும். இந்த புகாரின் பேரில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் இடம் எங்களை விசாரணைக்கு அனுப்பி வைத்தார்கள்.


திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அவரோ ... அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விசாரிக்கும் படி அனுப்பிவைத்தார்கள்.

அங்கிருந்த உதவி ஆய்வாளர் என்னிடம் புகார் பெற்று மனு எண் 415 / 2020 ஆகும்.பின்பு எனது பெற்றோர்க்கு தகவல் கொடுத்தனர். எனது உறவினர்கள் அனைவரும் திரண்டு காவல்நிலையம் வந்தனர்.

நான் விசாரணையில் எனது பெற்றோர்களிடம் செல்ல மாட்டேன் என்றும்...சென்றால்.? எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும். மேலும் எனக்கு கட்டாயமாக இன்னொரு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வார்கள். எனவே எனது பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினேன்.

அப்போது திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் முத்துராமன் காவல்நிலையத்திற்கு வந்தார். உடனே ஆய்வாளர் முத்துராமனும் - திருச்செந்துார் மகளிர் உதவி ஆயவாளரும் சேர்ந்து என்னை மிரட்ட ஆரம்பித்தனர்.

ஒழுங்காக உன் பெற்றோர் உடன் செல்? ...இல்லை என்றால்... உன்னை ஹோமில் கொண்டு அடைத்து விடுவோம். என கூறினார்கள்

அதற்கு நான் என்னை ஹோமில் அடைத்தால் தற்கொலை செய்து விடுவேன் என கூறினேன். அதற்கு ஆய்வாளர் முத்துராமன் " நீ அவன் கூட வாழ்வதை காட்டிலும்... தற்கொலை செய்து சாவு" என கூறினார். மேலும் என்னை ரொம்ப மிரட்டி முத்துராமன் அவர் கூறியபடி எழுதி வாங்கி கொண்டார்கள்.

திருச்செந்தூர் மகளிர் உதவி ஆய்வாளர் என்னிடம் "நீ முத்துராஜா -வோடு போனால் ? உன் உறவினர்கள் உன்னை கொலை செய்து விடுவார்கள்" என என்னை மிரட்டினார்கள். 

எனவே எனக்கு மிகவும் பயமாக உள்ளது.

ஆகவே சமூகம் அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்து இருபது வயது பெண் ஆகிய நான் காவல் நிலையத்தில் சென்று...புகார் அளித்த மனுதாராகிய என்னை எனது விருப்பத்திற்கு மாறாக சட்டவிரோதமாக மிரட்டி இந்திய அரசியமைப் சட்டம் வழங்கிய எனது அடிப்படை உரிமையை பறித்து தூத்துக்குடி பிரையண்ட நகரில் உள்ள எம்பவர் ஹோமில் அடைத்து திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் முத்துராமன், மற்றும் திருச்செந்தூர் மகளிர் காவல் உதவி ஆய்வாளர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதிலிருந்து  என்னை மீட்டு எனது விருப்பப்படி வாழ்வை அமைத்து கொள்ள வழி வகை செய்யும்படி தாங்களை வேண்டுகிறேன்.

இவ்வாறு மனு வில் கண்ணீர் உடன் எழுதி உள்ளார்.

இவ்வாறு கலப்பு திருமணம் செய்து பாதிக்கப்பட்ட பெண் நந்தினி தமிழக முதலமைச்சரிடம் தங்கள் இருவர் உயிரை காப்பாற்றி வாழ உதவி கேட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக