சனி, 10 அக்டோபர், 2020

தூத்துக்குடிக்கு தமிழக முதலமைச்சர் வருகை!!! அதிமுக தெற்கு மாவட்ட அலுவலத்தில் பரபரப்பாக நடந்த ஆலோசனை கூட்டம்!!!

 thoothukudileaks

கொரோனா தடுப்பு பணி, தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் அக்டோபர் 13ஆம் தேதி  தூத்துக்குடி  வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வரவேற்பது குறித்த தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.


இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட  செயலாளரும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர்  கூட்டறிக்கை நேற்று 09-10-2020 விடுத்து இருந்தனர்

.அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி, புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு வருகிற (13.10.2020) செவ்வாய்கிழமை தூத்துக்குடி வருகைதரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை சிறப்பாக வரவேற்பது குறித்த தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  (10.10.2020) சனிக்கிழமை இன்று மாலை 5.00 மணியளவில்  தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்திலும் வைத்து நடைபெற்றது. 


 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சி  தொண்டர்கள் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகம் முன்பு குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 



தெற்கு மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் இடம் முதலில் தெற்கு மாவட்ட செயலாளரும் ஸ்ரீனவ குண்டம் எம்.எல்.ஏ யுமான எஸ்.பி.சண்முகநாதன் கட்சியில் தற்போது புதிய பொறுப்ேற்று .நிர்வாகிகள் எழுச்சியுடனும் உற்சாகமாக காணப்படுகிறீர்கள் நமது  மாவட்டத்திற்கு வரும் முதல்அமைச்சர் அவர்களை சிறப்பாக வரவேற்கும் விதமாக போஸ்டர் மற்றும் விளம்பரம் செய்துவருகிறீர்கள் என்பதால் மகிழிச்சி யாக இருக்கிறது என்றார். பின்பு பேசியஅமைச்சர்  கடம்பூர் ராஜு நாம் உ ற்சாகமாக கட்சியினர் அனைவரும் நமது முதலமைச்சரை வரவேற்க வரும் 13.10 - 2020 அன்று வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

இந்த ஆலோசனை கூட்டம் மாலை 5 மணிலிருந்து 7 மணி வரை நடைபெற்றது. இதில் மகளிர் அணி உட்பட அனைவரும் கலந்து  கொண்டார்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக