திங்கள், 19 அக்டோபர், 2020

தூத்துக்குடியில் ‘காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி” விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா!!!

தூத்துக்குடி லீக்ஸ் 20-10-2020 11.45 pm

 ‘காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி” விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குறுந்தகடை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்


பெண்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் காவல்துறையினர் பெண்களை உடனடியாக காப்பாற்றுவதற்காக தமிழக காவல்துறை மிகவும் பயனுள்ள ‘காவலன் எஸ். ஓ. எஸ் செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை பெண்கள் தங்கள் ஆண்ட்ராய்டு செல்போன்களில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கும் செய்து வைத்துக்கொள்ளலாம். பெண்கள் தங்களுக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படும்போது இந்த செயலியில் உள்ள பொத்தானை அழுத்தினால் காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் உறவினர்கள் 3 பேருக்கு தானாகவே ஆபத்தான சூழ்நிலையில் உள்ளார் என்ற தகவலும், ஆபத்தான சூழ்நிலையில் உள்ள பெண் இருக்கும் சுற்றுச்சூழலை தானாகவே ஒளிப்பதிவு செய்து அதையும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும், அதனடிப்படையில் Gl obal Positioning System    மூலம் ஆபத்தில் உள்ளவர் இருக்கும் இடத்தையறிந்து காவல்துறையினர் சில வினாடிகளில் விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்று ஆபத்தில் உள்ளவரை காப்பாற்ற உதவும்.


இந்த செயலி பற்றி பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழக காவல்துறை பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள், இருப்பினும் குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது பொதுமக்களை எளிதில் சென்றடையும் என்பதால் சமூக ஆர்வலர்கள் இந்த விழிப்புணர்வு குறும்படத்தை தயார் செய்து (19.10.2020) அன்று கனி ரெசிடன்ஸி கூட்ட அரங்கில் குறுந்தகடை வெளியிட்டனர். இந்த குறுந்தகடு வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர்  கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு ‘காவலன் எஸ். ஓ. எஸ். செயலி விழிப்புணர்வு குறுந்தகடை வெளியிட்டனர்.




குறுந்தகடை வெளியிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில் இந்த ‘காவலன் எஸ்.ஓ.எஸ் செயலியை பெண்கள் மட்டுமல்லாமல் யார் வேண்டுமானாலும் அவர்களுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம். உங்கள் கண்ணுக்கெதிராக ஒரு குற்றம் நடக்கப்போகிறது என்று தெரிந்தால் இதனை பயன்படுத்தி காவல்துறைக்கு தகவல் கொடுக்கலாம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடைபெறுவதால்தான் குறிப்பாக பெண்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளச் சொல்கிறோம். பெண்கள் பிறப்பிலிருந்து இறப்பு வரை அவர்களுக்கு பல அநியாயங்கள் நிகழ்கிறது. பெண்கள் சிறு வயதில் திருமணம்,     சிறு வயது பெண்களை விவசாயம் போன்ற பல வேலைகளில் ஈடுபடுத்தி துன்புறுத்துவது, பாலியல் தொந்தரவு என பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகின்றனர். பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தந்தையை சார்ந்தும், அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து திருமணமானவுடன் கணவரை சார்ந்தும், அதன் பிறகு பெற்ற பிள்ளைகளை சார்ந்தும் ஏதோ ஒரு வகையில் அடிமைகள் போன்று இருக்கிறார்கள். 110 ஆண்டுகளுக்கு முன்பே பாரதியார் பெண்கள் கல்வி மற்றும் பெண்கள் விடுதலைக்காக குரல் கொடுத்துள்ளார். பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக வந்து விட்டனர். பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்கள் உள்ளது, அவற்றைப் பற்றிய பெண்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். இந்த செயலி பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட செயலியாகும். இந்த செயலியை அனைவரும் உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி தனது உரையை முடித்தார்.


இந்த குறும்பட வெளியீட்டு விழாவில் இந்த விழப்புணர்வு குறும்படத்தின் இயக்குனர். பிராட்வே சுந்தர் தலைமையும்,  பாப்பா சங்கர்,  முருகன், சுமங்கலி சதீஷ், செல்வி. அக்சயா,  விஸ்ராஜ், ராஜா லாரன்ஸ், காசி விஸ்வநாதன், அப்துல் மஜித், பொன்ராஜ் ஆகியோர் முன்னிலையும் வகித்தனர். அருந்ததி அரசு வரவேற்புரையாற்றினார்.  வழக்கறிஞர்  செங்குட்டுவன் மற்றும் கனி ரெசிடென்ஜி உரிமையாளர் ஜெயம் மற்றும் ஆசிரியர் கலா ஆகியோரும்,


தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர். செல்வன், தூத்துக்குடி  துணை கண்காணிப்பாளர் . கணேஷ், காவல் ஆய்வாளர்கள் வடபாகம்  அருள், முத்தையாபுரம் அன்னராஜ், மத்தியபாகம் ஜெயப்பிரகாஷ், தென்பாகம்  ஆனந்ததராஜன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா, தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி வீடியோ பார்க்க......

இங்கே......



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக