தூத்துக்குடி மாவட்டம் : 25.10.2020.தூத்துக்குடி லீக்ஸ்
குலசேகரப்பட்டடினம் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவில் தசரா பத்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் . பிரவீண்குமார் அபிநபு, இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் குலசேகரப்பட்டினம் ராயல் மஹாலில் பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 17.10.2020 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை (26.10.2020) பத்தாம் திருவிழா நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் 26.10.2020 மற்றும் 27.10.2020 ஆகிய இரு நாட்கள் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வர யாருக்கும் அனுமதி இல்லை
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தந்து நாளை (26.10.2020) மற்றும் நாளை மறுநாள் (27.10.2020) ஆகிய இரு நாட்கள் கோவிலுக்கு வராமல் தங்கள் ஊரிலேயே பக்தர்கள் காப்பை கழட்டி கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.
குலசை தசரா திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளுர் தொலைக்காட்சி மற்றும் பிரபல தொலைக்காட்சி மற்றும் You-tube சேனல்களிலும் நேரடியாக ஒளிப்பரப்பபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெற உள்ள பத்தாம் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோபி மற்றும் செல்வன் ஆகியோர் தலைமையில் 17 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 52 காவல் ஆய்வாளர்கள், 182 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், 1357 காவல்துறையினர் மற்றும் ஊர் காவல்படையினர் மற்றும் 4 தமிழ்நாடு சிறப்பக்காவல் படை அணியினர் அடங்கிய 1610 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.*
*பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யார், யாருக்கு எந்தெந்த இடங்களில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்தும், அவர்கள் செயலாற்ற வேண்டிய பணிகள் குறித்தும் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் . பிரவீண்குமார் அபிநபு, இ.கா.ப அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்
இக்கூட்டம் இன்று (25.10.2020) குலசேகரப்பட்டினம் ராயல் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோபி, செல்வன், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக