வெள்ளி, 2 அக்டோபர், 2026

மகாத்மா காந்தி பிறந்த தின விழா காமராஜர் நினைவு நாள் அனுசரிப்பு

 

மகாத்மா காந்தி பிறந்த தின விழா  காமராஜர் நினைவு நாள் அனுசரிப்பு!!!

தூத்துக்குடி: செப் 2
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தின விழாவும், கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினமும் தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் அனுசரிக்கப்பட்டது.

thoothukudileaks


நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், நாடார் பேரவை மாவட்டத் தலைவர் அருண் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில தொழிற்சங்கச் செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை ஆகியோர் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

thoothukudileaks


தொடர்ந்து சமத்துவ மக்கள் கழக மாவட்ட தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜரின் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்துசெல்வம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், மாநகரச் செயலாளர் முத்துசெல்வம், நாடார் பேரவை மாவட்டச் செயலாளர் டேனியல் ராஜ், மாவட்ட பொருளாளர் சுப்பையா, மாவட்ட மகளிர் அணி தலைவி சந்திரா, மகளிர் அணி நிர்வாகிகள் சாந்தி, ராஜாத்தி, கலை ஸ்வீட்டி, ரமணி மற்றும் காமராஜ், முருகன், டேனியல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வியாழன், 1 அக்டோபர், 2026

காந்தியடிகள், காமராஜர் சிலைகளுக்கு தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி  Tamil Nadu updates

காந்தியடிகள், காமராஜர் சிலைகளுக்கு தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி: செப் 2

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் தேமுதிக சார்பில் காந்தியடிகள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks


இந்நிகழ்ச்சிக்கு தேமுதிக தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் எம். தயாளலிங்கம் தலைமை வகித்தார். காந்தியடிகள் மற்றும் காமராஜர் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

thoothukudileaks


நிகழ்ச்சியில் ...

மாவட்ட துணைச் செயலாளர் எம். சம்சுதின், செயற்குழு உறுப்பினர் இராஜ பொம்மு செல்வம், பொதுக்குழு உறுப்பினர் போட்டோ கண்ணன், பகுதிக் கழகச் செயலாளர்கள் நாராயணமூர்த்தி, வல்லரசு, அந்தோணிராஜ், ஒன்றியச் செயலாளர்கள் கணேசமுருகன், விக்னேஷ் ராஜ் மற்றும் அணி நிர்வாகிகள் பொய்யாழி, அரசமுத்து, சக்திவேல், சுப்புராஜ், ஆதிலிங்கம், சபரி, மணி, அணவரதன், ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



தூத்துக்குடியில் ஜெ.ஜெ. ஆட்டோ கன்சல்டிங் புதிய கிளை திறப்பு விழா

 Tamil Nadu updates,2-10-2026

தூத்துக்குடியில் ஜெ.ஜெ. ஆட்டோ கன்சல்டிங் புதிய கிளை திறப்பு விழா

தூத்துக்குடி: செப் 2

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான ஜா. ஜவகர் அவரின் ஜெ.ஜெ. ஆட்டோ கன்சல்டிங் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

thoothukudileaks



விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க பொதுச் செயலாளருமான தெர்மல். ராஜா, நகர பொருளாளர் விக்னேஷ், தலைமுத்துநகர் வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்கனி, மாப்பிள்ளையூரணி வடக்கு, சோட்டையன்தோப்பு, சாண்முகபுரம் பகுதி வியாபாரிகள் சங்க செயலாளர் ரத்தினகுமார், தூத்துக்குடி மாவட்ட பட்டாசு விற்பனையாளர்கள் சங்க செயலாளர் பெத்து மாரியப்பன், இருசக்கர வாகனங்கள் பழுதுபார்ப்போர் சங்க பொருளாளர் செல்வகுமார், மத்திய சங்க பிரதிநிதி G.T. ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய கிளையை வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட தலைவர் தெர்மல். ராஜா, பேசியதாவது 

 “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நிறுவனத் தலைவர் ஐயா வெள்ளையன் அவர்களின் ஆசியோடு, ஜெ.ஜெ. ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் மேலும் பல கிளைகளைத் திறந்து சிறப்பாக வளர வேண்டும்” என மனதார வாழ்த்தினார்.

thoothukudileaks



புதிய கிளை தொடக்க விழாவில் வணிகர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு ஜெ.ஜெ. ஆட்டோ கன்சல்டிங் நிறுவனத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.


வாகனச் சோதனையில் 914 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் 4 பேர் கைது ரூ.7.57 லட்சம் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

வாகனச் சோதனையில் 914 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

4 பேர் கைது ரூ.7.57 லட்சம் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

திருநெல்வேலி: செப் 2திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் நேரடி மேற்பார்வையில் வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, ஒரே நாளில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்ற வாகனச் சோதனையில் மொத்தம் 914 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றுடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

thoothukudileaks


திருநெல்வேலி மாவட்டம்:
ஏர்வாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக வள்ளியூரைச் சேர்ந்த கண்ணன் (53), மறுகால்குறிச்சியைச் சேர்ந்த ஐயப்பன் (40) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 314 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம்:
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் நடத்திய வாகனச் சோதனையில், சக்கர வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 53 மூட்டைகளில் சுமார் 600 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக வேல்முருகன் (49), ரமேஷ் (47) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.7,57,500 ரொக்கப் பணமும், புகையிலைப் பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் கடத்தல், பதுக்கல் மற்றும் சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருநெல்வேலி சரகம் முழுவதும் வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களின் நிதி தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது. அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன், சட்ட விதிகளுக்கு உட்பட்டு வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மண்டலத்தில் மகளிர் வெற்றிப் பயணம் திட்டம் தொடக்கம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மகாஜன் ஆனையர் பிரியங்கா மண்டல மேலாளர் ராமகிருஷ்ணன் பங்கேற்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

Tamil Nadu updates,

 photo news by Arunan Reporter 


தூத்துக்குடி மண்டலத்தில் மகளிர் வெற்றிப் பயணம் திட்டம் தொடக்கம்

கட்டணமில்லா பேருந்து சேவைகளின் வழித்தட விவரங்கள் வெளியீடு

தூத்துக்குடி:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட் சார்பில் செயல்படுத்தப்படும் மகளிர் வெற்றிப் பயணம் திட்டம், தூத்துக்குடி மண்டலத்திலும் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை சுமார் 10.15 மணியளவில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எஸ். பிரியங்கா மற்றும் தூத்துக்குடி மண்டல மேலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் மகளிர் வெற்றிப் பயணம் திட்டத்திற்கான பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


தொடர்ந்து, பேருந்து தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மண்டலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மகளிர், மாணவிகள் உள்ளிட்டோர் குறிப்பிட்ட சாதாரண சேவை பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மண்டலத்தில் உள்ள கோவில்பட்டி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி டவுன், தூத்துக்குடி புறநகர், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் விளாத்திகுளம் உள்ளிட்ட பணிமனைகளின் கீழ் இயங்கும் பல்வேறு சாதாரண சேவை பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன.


முக்கிய வழித்தடங்கள்

கோவில்பட்டி பணிமனையில் இருந்து புதியம்புத்தூர், மதுரை மாட்டுத்தாவணி, தூத்துக்குடி, ராஜபாளையம், திருநெல்வேலி சந்திப்பு, கயத்தாறு மற்றும் விளாத்திகுளம் உள்ளிட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சாத்தான்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் மற்றும் உடன்குடி உள்ளிட்ட வழித்தடங்களிலும், ஸ்ரீவைகுண்டம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், சாத்தான்குளம், உடன்குடி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட வழித்தடங்களிலும் சேவைகள் இடம்பெற்றுள்ளன.

மகளிர் வெற்றி பயணம் அமைச்சர் ஆதவ் அர்ஜுன் பரபரப்பு பேச்சு 

தூத்துக்குடி டவுன் பணிமனையில் இருந்து மலைப்பட்டி, பரிவள்ளிக்கோட்டை, உவரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் கோயில் உள்ளிட்ட வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


தூத்துக்குடி புறநகர் பணிமனையில் இருந்து வேப்பங்குளம், திருநெல்வேலி, புளியம்பட்டி, கயத்தாறு மற்றும் விளாத்திகுளம் உள்ளிட்ட வழித்தடங்களிலும், திருச்செந்தூர் பணிமனையில் இருந்து திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களிலும் சாதாரண சேவை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


விளாத்திகுளம் பணிமனையில் இருந்து கோவில்பட்டி, சாயல்குடி, புதூர், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் மற்றும் மதுரை மாட்டுத்தாவணி உள்ளிட்ட வழித்தடங்களிலும் சேவைகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல மேலாளர் ராமகிருஷ்ணன், பணி அமைப்பு மற்றும் நிர்வாகப் பிரிவு மேலாளர் சண்முகம், தூத்துக்குடி மண்டல துணை உதவி மேலாளர் வேல்முருகன், நகர கிளை மேலாளர் ரமேஷ் கார்த்திக், புறநகர் கிளை மேலாளர் குமார் உள்ளிட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மகளிர் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மண்டலத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் தட எண், பணிமனை மற்றும் வழித்தட நீளம் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதால், பயணிகள் தங்களுக்கு தேவையான பேருந்து சேவையை அறிந்து பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


🤷🏻‍♀️ Thoothukudi LEAKS...

தூத்துக்குடி மண்டலம் சார்பாக மகளிர் வெற்றிப் பயணம் திட்டத்திற்கான கட்டணமில்லாப் பேருந்துகளின் விவரங்கள்

தமிழ்நாட்டின் பிற மண்டலங்களைப் போலவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட் - தூத்துக்குடி மண்டலத்திலும் அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாப் பயணத்தை மேற்கொள்ளலாம்.

இது, தூத்துக்குடி மண்டலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் மாணவிகளுக்கு ஒரு புதிய வசதியை ஏற்படுத்தித் தரும் என்று நம்பப்படுகிறது.

இந்தப் பதிவில் பேருந்துகளின் தடம் மற்றும் வழித்தடத்தின் நீளம் போன்றவை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.


📍 கோவில்பட்டி, சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பணிமனைகள்

  1. 🚌 149-A | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ புதியம்புத்தூர் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 47.5 கிமீ

  2. 🚌 149-B | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ புதியம்புத்தூர் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 60.0 கிமீ

  3. 🚌 149-C | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 110.1 கிமீ

  4. 🚌 149-D | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ தூத்துக்குடி பழைய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 101.8 கிமீ

  5. 🚌 149-E | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ தூத்துக்குடி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 61.0 கிமீ

  6. 🚌 151-A | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ ராஜபாளையம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.1 கிமீ

  7. 🚌 151-B | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ ராஜபாளையம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.1 கிமீ

  8. 🚌 151-D | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ ராஜபாளையம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.1 கிமீ

  9. 🚌 151-J | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ ராஜபாளையம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.1 கிமீ

  10. 🚌 151-K | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ ராஜபாளையம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.1 கிமீ

  11. 🚌 151-O | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ ராஜபாளையம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.1 கிமீ

  12. 🚌 158-B | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ திருநெல்வேலி சந்திப்பு | சாதாரண சேவை (ORD) | 🛤️ 80.2 கிமீ

  13. 🚌 169-B | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ கயத்தாறு | சாதாரண சேவை (ORD) | 🛤️ 49.2 கிமீ

  14. 🚌 501-C | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 110.1 கிமீ

  15. 🚌 501-E | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 110.1 கிமீ

  16. 🚌 502-A | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ விளாத்திகுளம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 99.5 கிமீ

  17. 🚌 502-B | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ விளாத்திகுளம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 99.5 கிமீ

  18. 🚌 502-F | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ விளாத்திகுளம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 99.5 கிமீ

  19. 🚌 134-KD | சாத்தான்குளம் | சாத்தான்குளம் ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 16.8 கிமீ

  20. 🚌 134-XF | சாத்தான்குளம் | சாத்தான்குளம் ↔ திருநெல்வேலி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.0 கிமீ

  21. 🚌 137-I | சாத்தான்குளம் | சாத்தான்குளம் ↔ உடன்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 67.3 கிமீ

  22. 🚌 165-C | சாத்தான்குளம் | சாத்தான்குளம் ↔ திருநெல்வேலி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 47.0 கிமீ

  23. 🚌 165-E | சாத்தான்குளம் | சாத்தான்குளம் ↔ திருநெல்வேலி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 49.2 கிமீ

  24. 🚌 165-XM | சாத்தான்குளம் | சாத்தான்குளம் ↔ திருநெல்வேலி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 47.0 கிமீ

  25. 🚌 137-C | ஸ்ரீவைகுண்டம் | திருநெல்வேலி புதிய B/S ↔ சாத்தான்குளம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 59.1 கிமீ

  26. 🚌 137-D | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ உடன்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.3 கிமீ

  27. 🚌 137-E | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ உடன்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.3 கிமீ

  28. 🚌 137-F | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ உடன்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.3 கிமீ

  29. 🚌 137-G | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ உடன்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 74.6 கிமீ

  30. 🚌 137-H | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ உடன்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.3 கிமீ

  31. 🚌 144-A | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ தூத்துக்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 40.0 கிமீ

  32. 🚌 144-C | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ தூத்துக்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 40.0 கிமீ

  33. 🚌 144-D | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ தூத்துக்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 37.9 கிமீ


📍 ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி டவுன் மற்றும் தூத்துக்குடி புறநகர் பணிமனைகள்

  1. 🚌 147-B | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ தூத்துக்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 49.7 கிமீ

  2. 🚌 578-A | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ தூத்துக்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 42.3 கிமீ

  3. 🚌 104-B | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ மலைப்பட்டி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 35.0 கிமீ

  4. 🚌 105-A | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ பரிவள்ளிக்கோட்டை | சாதாரண சேவை (ORD) | 🛤️ 61.0 கிமீ

  5. 🚌 105-B | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ பரிவள்ளிக்கோட்டை | சாதாரண சேவை (ORD) | 🛤️ 35.0 கிமீ

  6. 🚌 143-C | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ உவரி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 96.0 கிமீ

  7. 🚌 146-A | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ நாசரேத் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 48.0 கிமீ

  8. 🚌 146-B | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ நாசரேத் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 48.0 கிமீ

  9. 🚌 146-C | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ நாசரேத் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 48.0 கிமீ

  10. 🚌 146-D | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ நாசரேத் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 48.0 கிமீ

  11. 🚌 146-E | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ நாசரேத் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 48.0 கிமீ

  12. 🚌 146-F | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ நாசரேத் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 0.0 கிமீ

  13. 🚌 147-A | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ ஸ்ரீவைகுண்டம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 42.3 கிமீ

  14. 🚌 147-D | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ ஸ்ரீவைகுண்டம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 42.3 கிமீ

  15. 🚌 157-A | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ திருச்செந்தூர் கோயில் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 46.0 கிமீ

  16. 🚌 157-D | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ திருச்செந்தூர் கோயில் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 61.0 கிமீ

  17. 🚌 104-A | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ வேப்பங்குளம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 48.0 கிமீ

  18. 🚌 150-B | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 55.0 கிமீ

  19. 🚌 150-C | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 55.0 கிமீ

  20. 🚌 150-F | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 55.0 கிமீ

  21. 🚌 150-G | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 55.0 கிமீ

  22. 🚌 150-J | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 55.0 கிமீ

  23. 🚌 150-N | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 55.0 கிமீ

  24. 🚌 158-A | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ புளியம்பட்டி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 55.1 கிமீ

  25. 🚌 169-A | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ கயத்தாறு | சாதாரண சேவை (ORD) | 🛤️ 46.0 கிமீ

  26. 🚌 183-B | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ விளாத்திகுளம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 51.0 கிமீ

  27. 🚌 134-C | திருச்செந்தூர் | திருச்செந்தூர் கோயில் ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.0 கிமீ

  28. 🚌 134-D | திருச்செந்தூர் | திருச்செந்தூர் கோயில் ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.0 கிமீ

  29. 🚌 134-G | திருச்செந்தூர் | திருச்செந்தூர் கோயில் ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.0 கிமீ

  30. 🚌 134-KC | திருச்செந்தூர் | திருச்செந்தூர் கோயில் ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 65.0 கிமீ

  31. 🚌 134-KF | திருச்செந்தூர் | திருச்செந்தூர் கோயில் ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 52.0 கிமீ

  32. 🚌 572-XA | திருச்செந்தூர் | திருச்செந்தூர் கோயில் ↔ நாகர்கோவில் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 120.2 கிமீ

  33. 🚌 572-XB | திருச்செந்தூர் | திருச்செந்தூர் கோயில் ↔ நாகர்கோவில் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 48.5 கிமீ

  34. 🚌 183-A | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ தூத்துக்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 51.0 கிமீ

  35. 🚌 183-C | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ தூத்துக்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 51.0 கிமீ

  36. 🚌 183-F | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ கோவில்பட்டி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 35.5 கிமீ

  37. 🚌 183-G | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ தூத்துக்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 37.5 கிமீ


📍 விளாத்திகுளம் பணிமனை

  1. 🚌 183-XA | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ கோவில்பட்டி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 35.5 கிமீ

  2. 🚌 189-A | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ சாயல்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 40.0 கிமீ

  3. 🚌 189-C | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ புதூர் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 18.6 கிமீ

  4. 🚌 502-G | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ திருநெல்வேலி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 99.5 கிமீ

  5. 🚌 502-H | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ திருநெல்வேலி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 99.5 கிமீ

  6. 🚌 502-J | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ திருநெல்வேலி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 99.5 கிமீ

  7. 🚌 503-C | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ திருநெல்வேலி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 126.5 கிமீ

  8. 🚌 587-A | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 104.7 கிமீ

  9. 🚌 587-B | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 104.7 கிமீ

  10. 🚌 587-C | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 104.7 கிமீ

  11. 🚌 587-D | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 104.7 கிமீ

  12. 🚌 587-E | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 104.7 கிமீ

  13. 🚌 587-G | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 104.7 கிமீ

  14. 🚌 587-H | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 104.7 கிமீ

  15. 🚌 587-J | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 104.7 கிமீ