மாவட்ட ஆட்சியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாவட்ட ஆட்சியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடி மாவட்டம் புதிய ஆட்சியர் இளம் பகவத் ஐஏஎஸ் நியமனம்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

16-8-2024 photo news time 12.00 pm

by Arunan journalist 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாற்றம் 

புதிய ஆட்சியராக இளம் பகவத் 

ஜ ஏ எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



இதுபற்றி செய்தியாவது;-


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 20-10-2023 அன்று லட்சுமிபதி ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார்.

மாவட்ட ஆட்சியராக...

பத்து மாதம் ஆன நிலையில்... தற்போது 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த

லட்சுமிபதி ஐஏஎஸ், முதலமைச்சரின்

இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 


தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இளம் பகவத்தை நியமித்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு




வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

கட்டி முடித்தும் பல மாதங்கள் ஆகியும் திறக்க படாமல் தூத்துக்குடி மாநகராட்சி சில்வர் புரம் ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமக்கள் அவதி

 தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதியான சில்வர் புரத்தில் ஆரம்ப சுகாதர நிலையம் புதுப்பித்து பல மாதங்களுக்கு   மேல் ஆகி இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது.


ஏன் ?! இன்னும் திறக்க படாமல் பூட்டு தொங்கிறது. மாவட்ட நிர்வாகம் இனியாவது கவனிக்குமா ????

 அதனை சுற்றி உள்ள பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாற்று இடம் சென்று தங்கள் அத்தியாவசிய தேவைக்கு அலைந்து சிகிச்சை பெறுவதற்கு அதிக நேரம் செலவிட்டு மிகவும் சிரமப்படுகிறார்கள் .


ஆகையினால் அதனை திறப்பதற்கு  தகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாக  அப்பகுதி சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

புதன், 15 பிப்ரவரி, 2023

கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கனிமொழி எம்.பி.

thoothukudileaks:-15-2-2023

news by arunan



தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உப கரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கனிமொழி எம்.பி.





இது பற்றிய செய்தியாவது :-

இன்று (15/02/2023) புதன்கிழமை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 



இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!



தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் .செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,  தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன், மாவட்ட ஊராட்சி தலைவர் .பிரம்மசக்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்!

திங்கள், 13 பிப்ரவரி, 2023

தூத்துக்குடி பறக்கும்படை வட்டாட்சியர் மீது மனைவி பரப்பரப்பு புகார்

 thoothukudileaks 14-2-2023

தூத்துக்குடி பறக்கும்படை வட்டாட்சியர் மீது அவரது மனைவி நேற்று 13-2-2023 மாவட்ட ஆட்சியர் திங்கள் மனுவின் போது பரப்பரப்பு புகார் அளித்துள்ளார்.

இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி பறக்கும்படை வட்டாட்சியராக பணிபுரிந்து வருபவர் ஞான்ராஜ். இவரது மனைவி கிரேஸி விஜயா.  தூத்துக்குடி மாாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன் அளித்த பேட்டி அளித்தார்்.

அவர் பேசியதாவது:-

எனது கணவர் பறக்கும் படை வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். எனக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 



எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 1 ½ ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எனது அம்மா வீட்டில் குடியிருக்கிறேன்.


 கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற எனது 2 குழந்தைகளையும் வழக்கறிஞர்கள் உதவியுடன் கடத்தி சென்றுவிட்டார். 



சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் கடந்த 8ம் தேதி குழந்தைகளை என்னிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. நான் எனது குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளிக்கு சென்றேன். பள்ளி நிர்வாகம் என்னை காக்க வைத்து விட்டு என் கணவருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்து வரவழைத்து குழந்தைகளை அவரிடம் ஒப்படைத்து விட்டனர்.


 அவர் எப்படி எங்கு சென்றார் என்று எனக்கு தெரியாது. தற்போது ஒரு குழந்தை மட்டும் பள்ளிக்கு வந்து செல்கிறது. 


மற்றொரு குழந்தை என்ன ஆனது என்று எனக்கு தெரியவில்லை. 



கடந்த 8 மாதங்களில் 45 வாய்தாக்களுக்கு அரசாங்க வாகனத்தில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். 


மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை தாக்கியது உட்பட 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 


முன்ஜாமீன் எடுக்கவில்லை. அவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமலும் பணியில் தொடர்ந்து வருகிறார். 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் இடம் பறக்கும் படை தாசில்தார் ஞான்ராஜ் பற்றி அவரது மனைவி கிரேஸி விஜயா புகார் மனு அளித்தார்.


எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் நான் அளித்துள்ள மனு மீது நடவடிக்கை எடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி எனது 2 குழந்தைகளையும் என்னுடன் அனுப்பி வைக்க ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.