திங்கள், 13 பிப்ரவரி, 2023

தூத்துக்குடி பறக்கும்படை வட்டாட்சியர் மீது மனைவி பரப்பரப்பு புகார்

 thoothukudileaks 14-2-2023

தூத்துக்குடி பறக்கும்படை வட்டாட்சியர் மீது அவரது மனைவி நேற்று 13-2-2023 மாவட்ட ஆட்சியர் திங்கள் மனுவின் போது பரப்பரப்பு புகார் அளித்துள்ளார்.

இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி பறக்கும்படை வட்டாட்சியராக பணிபுரிந்து வருபவர் ஞான்ராஜ். இவரது மனைவி கிரேஸி விஜயா.  தூத்துக்குடி மாாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன் அளித்த பேட்டி அளித்தார்்.

அவர் பேசியதாவது:-

எனது கணவர் பறக்கும் படை வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். எனக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 



எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 1 ½ ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எனது அம்மா வீட்டில் குடியிருக்கிறேன்.


 கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற எனது 2 குழந்தைகளையும் வழக்கறிஞர்கள் உதவியுடன் கடத்தி சென்றுவிட்டார். 



சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் கடந்த 8ம் தேதி குழந்தைகளை என்னிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. நான் எனது குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளிக்கு சென்றேன். பள்ளி நிர்வாகம் என்னை காக்க வைத்து விட்டு என் கணவருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்து வரவழைத்து குழந்தைகளை அவரிடம் ஒப்படைத்து விட்டனர்.


 அவர் எப்படி எங்கு சென்றார் என்று எனக்கு தெரியாது. தற்போது ஒரு குழந்தை மட்டும் பள்ளிக்கு வந்து செல்கிறது. 


மற்றொரு குழந்தை என்ன ஆனது என்று எனக்கு தெரியவில்லை. 



கடந்த 8 மாதங்களில் 45 வாய்தாக்களுக்கு அரசாங்க வாகனத்தில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். 


மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை தாக்கியது உட்பட 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 


முன்ஜாமீன் எடுக்கவில்லை. அவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமலும் பணியில் தொடர்ந்து வருகிறார். 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் இடம் பறக்கும் படை தாசில்தார் ஞான்ராஜ் பற்றி அவரது மனைவி கிரேஸி விஜயா புகார் மனு அளித்தார்.


எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் நான் அளித்துள்ள மனு மீது நடவடிக்கை எடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி எனது 2 குழந்தைகளையும் என்னுடன் அனுப்பி வைக்க ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக