thoothukudileaks:-15-2-2023
news by arunan
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உப கரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கனிமொழி எம்.பி.
இது பற்றிய செய்தியாவது :-
இன்று (15/02/2023) புதன்கிழமை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் .செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன், மாவட்ட ஊராட்சி தலைவர் .பிரம்மசக்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக