Tamil Nadu updates thoothukudileaks daily news
photo news by Arunan Reporter 13-11-2026
தூத்துக்குடி:நவ 13
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த தனது மகனுக்கு, மற்ற உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கியது போல் ரூ.20 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனக் கோரி, கயல்விழி என்ற தாய் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
ஒட்டப்பிடாரம் அருகே கீழமுடி மண் பகுதியைச் சேர்ந்த கயல்விழியின் மகன் ஜஸ்டின் செல்வா மதிஷ், ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனது மகனுக்கு இதுவரை ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ள ரூ.25 லட்சத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.45 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி தனது குடும்பத்திற்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக