தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து தூத்துக்குடியில் அக்டோபர் 31-ல் திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்!
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் நடத்த அறிவிப்பு!
தூத்துக்குடி, அக்.26:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதையும் கண்டித்து, அக்டோபர் 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக மகளிர் அணி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக மகளிர் அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,...
தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களைக் கட்டுப்படுத்த அரசு தவறி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற குற்றச் செயல்கள் குறித்து ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல் வெறும் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருவதாகவும் திமுக மகளிர் அணி விமர்சித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தியும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அக்டோபர் 31ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக