திங்கள், 7 செப்டம்பர், 2026

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 41-வது தேசிய கண் தான இருவார விழா

 Tamil Nadu update

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 41-வது தேசிய கண் தான இருவார விழா

தூத்துக்குடி, செப்.7:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 41-வது தேசிய கண் தான இருவார விழா சிறப்பாக நடைபெற்றது.



விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் . விஷ்ணுசந்திரன், இ.ஆ.ப. தலைமை தாங்கினார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. E. எபினேசர் ஜோயல்குமார், M.D., DNB., துணை முதல்வர் மரு. V. கலைவாணி, M.D., கண்காணிப்பாளர் மரு. J. கைசெல்வ ஜெயமணி, MBBS., DMRT. உள்ளிட்ட மருத்துவர்கள், கண் மருத்துவத் துறை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


இம்மருத்துவமனை கண் தானப் பிரிவு மூலம் வருடத்திற்கு சுமார் 270 கண்கள் வீதம், இதுவரை மொத்தம் 1,486 கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது. மேலும், இம்மருத்துவமனையில் கருவிழி மாற்றுச் சிகிச்சை மூலம் இதுவரை 123 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.


கண் தானம் வழங்கிய குடும்பத்தினரை சிறப்பிக்கும் வகையில், அவர்களை அழைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சார்பில் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.


இம்மருத்துவமனையில் கருவிழி மாற்றுச் சிகிச்சை மூலம் பார்வை பெற்ற இராஜேந்திரன் என்பவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, அனைவரும் கண் தானம் செய்வோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்.


மேலும், மரு. J. கைசெல்வ ஜெயமணி, MBBS., DMRT. தலைமையில் கண் தான விழிப்புணர்வு தொடர்பான பாடல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண் தான விழிப்புணர்வு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்றுகள் வழங்கினார்.

thoothukudileaks


இறுதியில் மரு. R. ஜெயந்தி, M.S., D.O. உள்ளிட்ட மருத்துவர்கள் விழாவை சிறப்பாக நடத்தினர். விழா தேசிய கண் தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக