சேலத்தில் 16-ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை தொடர்பான ஆலோசனை கூட்டம்
சேலம் செப 7
சேலம் மாவட்டம் குகை பாலம் பகுதியில் உள்ள ராம ஆசிரமத்தில் 16-ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்துடைய நிறுவனர் மற்றும் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் தவத்திரு.சுவாமி. இராமானந்தா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்தர் ரத யாத்திரையானது குடகு மலையில் தொடங்கி பூம்புகார் வரை செல்லும் பகுதிகளில் அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் ரதத்தில் வரும் காவிரி தாய்க்கு வரவேற்பு கொடுப்பது மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பெளர்ணமி நாட்களில் காவிரி நதிக்கு ஆரத்தி காட்டுவது போன்ற பல முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது
.இந்த நிகழ்வில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்துடைய முக்கிய பொறுப்பாளர்கள் சுவாமி.ஈஸ்வரானந்தா, சுவாமி.சிவராமானந்தா,சுவாமி. பாலரகுநானந்தாபுரி, சேலம் குணசேகரன், ஓசூர் காவிரி.வாசு, இந்து சேனா மாநில தலைவர் மற்றும் காவிரி நதி நீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணை செயலாளர் அருள்வேலன் ஜி, சேலம் ரமேஷ், அர்ச்சகர் விஷ்ணு மற்றும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் புரவலர்கள், துறவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக