Tamil Nadu updates photo news by Arunan journalist
தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்: பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
தூத்துக்குடி, ஜூலை 11:
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று (11.07.2026) காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி பெல் ஹோட்டல் கருத்தரங்கில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் அன்புராஜ் ஜெபசிங் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் குணசீலன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஹீராஜான் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் பாக்கியம் 30.06.2026 வரையிலான சங்கத்தின் வரவு–செலவு அறிக்கையை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கை பொதுக்குழுவால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, சங்கத்தின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சொ. ராஜா வெளியிட, அதனை சங்கத் தலைவர் அன்புராஜ் ஜெபசிங் பெற்றுக்கொண்டார்.
கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்!!!
தமிழக அரசின் நிர்வாகத்திற்கும், தமிழக முதல்வருக்கும், சட்டம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல் குமார் அவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், உடன்குடி அனல்மின் நிலையத்தின் பராமரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தப் பணிகளை சங்க உறுப்பினர்கள் திறம்பட மேற்கொண்டு, அந்த நிலையத்தையும் உற்பத்தியில் முன்னோடி நிலையமாக மாற்றும் வகையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கிளவுட் ஆடிட் முறை நீக்கம்!!!
சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான கிளவுட் ஆடிட் முறையை நீக்கியமைக்காக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ், இ.ஆ.ப. மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், இபிஎப் (EPF) மற்றும் இஎஸ்ஐ (ESI) உள்ளிட்ட தொழிலாளர் நலக் கட்டணங்களை வாரியம் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுக்குழு வலியுறுத்தியது.
கூட்டத்தில் திரளான ஒப்பந்தக்காரர்கள் பங்கேற்றனர். நிறைவில் சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சொ. ராஜா நன்றி உரையாற்றினார். தொடர்ந்து, பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக