தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி மாவட்டம் : 02.04.2026
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் நாய் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் வசித்து வரும் நடராஜர் என்பவர் நாய் வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த நாய் தனது தொழிலுக்கு இடையூறு செய்ததாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சின்னதுரை, தனது ஆட்டோவில் இருந்து இறங்கி நாயை தாக்கி கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தி மற்றும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரினங்களுக்கு இவ்வாறு ஈவுமிரக்கமின்றி நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும், சம்பந்தப்பட்டவருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக