செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சி வாராந்திர குறை தீர்க்கும் முகாம் – பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை இன்று 46 மனுக்கள் பெறப்பட்டன தூத்துக்குடி 33வது வார்டு பாளை ரோடு மேற்கு மில்லர் புரத்தில் தார் ரோடு சம்பந்தமாக பரபரப்பு மனு.

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்.11:

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (11.02.2026, புதன்கிழமை) மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது.

thoothukudileaks


இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றம், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து பயன்பெறச் செய்யப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks
தூத்துக்குடி 33வது வார்டு பாளை ரோடு மேற்கு மில்லர் புரத்தில் தார் ரோடு சம்பந்தமாக ... பரபரப்பு மனு...
thoothukudileaks
தூத்துக்குடி நகரமே தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள் அமைந்துள்ள 800 மீட்டர் நீளமுள்ள விதி மட்டும் நகராட்சிக்கு சொந்தமில்லை என்பது அதிசயமாக உள்ளது.???

thoothukudileaks


இந்நிகழ்வில் மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டு ராஜா, மேற்கு மண்டல உதவி ஆணையர் காந்திமதி, S.O. ராஜபாண்டி, A.W. லெனின், A.E. ஜெயபிரசாந்த், A.E. ராகவி, மாமன்ற உறுப்பினர்கள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மேற்கு மண்டல மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள், குறுகிய நேரத்தில் தங்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளை நேரில் சந்தித்து மனுக்கள் அளிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். 

மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் இம்முகாம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக