புதன், 21 ஜனவரி, 2026

தூத்துக்குடி செய்தியாளர் சேகர் இல்ல விழா: பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் 

தூத்துக்குடி, ஜன.21:

தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினரும், சட்டம்–ஒழுங்கு புலனாய்வு  இதழ் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளருமான சேகர் - அனிஸ் பிரிஸ்காள் தம்பதியின் புதல்வி செல்வி ஜொபினா பூப்புனித நீராட்டு விழா இன்று மாப்பிள்ளையூரணி சவோயார்புரம் புனித சவோயார் சமுதாய நலக்கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


இந்த விழாவில் தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா நிறுவன தலைவர் மற்றும் சட்டம்–ஒழுங்கு ஆசிரியர் சிவத்தமிழன், சீனியர் ரிப்போர்ட்டர் வார இதழ் சப் எடிட்டர் ரோஜா அருணன், தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் ராஜு, கௌரவ ஆலோசகர் ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், மாரிராஜா, செந்தில்முருகன், இருதயராஜ், உறுப்பினர் முரளிகணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் அதிமுக ஒன்றிய செயலாளர் ஜவஹர், முன்னாள் இளைஞர் பாசறை தலைவர் சி.த.செ. ஜெபசிங், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், ஸ்டாலின், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வசுமதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், வில்சன், அதிமுக ஒன்றிய ஜெபேரவை செயலாளர் பால்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராயப்பன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தமிழக வெற்றிக்கழக மாவட்ட துணைச் செயலாளர் வசந்தி ஜார்ஜ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்ட போட்டோ & வீடியோ தொழிலாளர் நல சங்க மாவட்ட தலைவர் முரளிகண்ணன், செயலாளர் விவேக், பொருளாளர் சுரேஷ் பெர்னாண்டோ, தொழிலதிபர்கள் அசோக் பாபு, பங்குராஜ், தொம்மைராஜ், டோமினிக், சுரேஷ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு விழா சிறக்க வாழ்த்தினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக