தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி: ஜன.21
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த முகாமில் பொதுமக்கள் தரப்பில் சொத்து வரி தொடர்பான கோரிக்கைகள், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றம், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பொதுமக்கள் சேவைகளை பெற்றனர்.
இன்றைய முகாமில் பொதுமக்கள் தரப்பில் மொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பரிசீலனைக்காக ஒப்படைக்கப்பட்டன.
மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக