தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி
செய்தி புகைப்படங்கள் அருணன் செய்தியாளர்
தூத்துக்குடி, ஜன. 21:
தூத்துக்குடி ரோட்டரி கிளப் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் இன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் பிரியங்கா ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து தூத்துக்குடி ரோட்டரி கிளப் தலைவர் பின்டோ வில்வ ராயர், செயலாளர் மகாலிங்கம், துணை செயலாளர் ஜோசப் பிராங்க்ளின் உள்ளிட்டோர் பங்கேற்று முகாமை முன்னின்று நடத்தினர்.
முகாமில் மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். இதற்காக திருநெல்வேலி காவேரி மருத்துவமனையிலிருந்து இதய பாதுகாப்பு ஊர்தி வரவழைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக