ஞாயிறு, 25 ஜனவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் 77வது குடியரசு தின விழா முன்னாள் கவுன்சிலர் கோட்டு ராஜா பரபரப்பு பேச்சு

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜனவரி 26 :

இந்திய குடியரசின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks


விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர்  அன்னலட்சுமி கோட்டு ராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசிய கீதம் முழங்க அனைவரும் கொடியை நோக்கி மரியாதை செலுத்தினர்.

https://youtube.com/shorts/5kayK-3eY8o?si=6LdsKFIsRS78WvWL குடியரசு தின விழாவில் தூத்துக்குடி Ex கவுன்சிலர் கோட்டு ராஜா பரபரப்பு பேச்சு

இந்த நிகழ்வில் மேற்கு மண்டல உதவி ஆணையர் காந்திமதி, S.O. ராஜபாண்டி, A.W. லெனின், A.E. ஜெயபிரசாந்த், A.E. ராகவி, முன்னாள் கவுன்சிலர் கோட்டு ராஜா, மாமன்ற உறுப்பினர்கள், மேற்கு மண்டல மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் முழுவதும் திருவிழா போல் அலங்கரிக்கப்பட்டு, நாட்டுப்பற்று மிக்க சூழலில் விழா சிறப்பாக நடைபெற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக