தூத்துக்குடி, ஜனவரி 26 :
தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இந்திய குடியரசின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசிய கீதம் முழங்க அனைவரும் கொடியை நோக்கி மரியாதை செலுத்தினர்.
விழாவில் சி. ப்ரியங்கா, இ.ஆ.ப., தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகம் முழுவதும் திருவிழா போல் அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது. திருவள்ளுவர் ஆண்டு 2057, தை மாதம் 12ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த விழாவில், இந்திய குடியரசின் 77வது ஆண்டு நிறைவை தூத்துக்குடி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடினர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக