வியாழன், 8 ஜனவரி, 2026

உங்க கனவ சொல்லுங்க’ திட்டம் நாளை தொடக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு தமிழகமெங்கும் 50,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுடன் நேரடி உரையாடல்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி


தமிழக மக்களின் எதிர்கால கனவுகள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நேரடியாக அறிந்து கொள்ளும் நோக்கில், தமிழக அரசின் முக்கியமான மக்கள் தொடர்புத் திட்டமான ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்    தொடங்கி வைக்கிறார்.

thoothukudileaks


இந்த திட்டத்தின் தொடக்க விழா திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற உள்ளது. 

இத்திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான கனவுகள், அடிப்படை தேவைகள், அரசிடம் உள்ள கோரிக்கைகள் ஆகியவை பதிவு செய்யப்பட உள்ளன.

இதற்காக தமிழகமெங்கும் 50,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுடன் நேரடி உரையாடல் நடத்தி, அவர்களின் கருத்துகளை சேகரிக்க உள்ளனர்.


 மக்கள் சொல்வதையே திட்டங்களாக மாற்றும் நோக்கில், இம்முயற்சி அரசின் நிர்வாகத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பங்கேற்புடன் கூடிய நிர்வாகத்தை வலுப்படுத்தும் இந்த ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம், தமிழகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு புதிய பாதையை உருவாக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

— தூத்துக்குடி லீக்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக