தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி photo news by Arunan journalist
சென்னை, ஜன. :9
தமிழகத்தில் முதன்முறையாக வாட்ஸ்ஆப் செயலியுடன் இணைந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாட்ஸ்ஆப் நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகள் இடையே கையெழுத்தானது.
இந்த புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு செல்லாமல், தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்ந்த பல்வேறு சான்றிதழ்களை எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்.
"பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மட்டுமின்றி, வருமானம், சமூக நிலை உள்ளிட்ட முக்கிய சான்றிதழ்களும் இந்த வாட்ஸ்ஆப் சேவையின் மூலம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது"
இதற்காக பொதுமக்கள்
78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினால், தேவையான சேவைகள் குறித்து வழிகாட்டுதலுடன் சான்றிதழ்களை பெற முடியும்.
டிஜிட்டல் இந்தியா இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு எடுத்து வரும் இந்த முயற்சி, பொதுமக்களின் நேரமும் செலவும் மிச்சமாகும் வகையில் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக