தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி
photo news by Arunan journalist
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
கடந்த 3 நாட்களில் கஞ்சா ஆயில் பறிமுதல்:
₹1.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றல் – 4 பேர் கைது என இது பற்றிய செய்தியாவது...
தூத்துக்குடி ஜன9
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த 3 நாட்களில் சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 07.01.2026 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த 2 எதிரிகளை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல், நேற்று (08.01.2026) தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த மேலும் 2 எதிரிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் அவர்களின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, கடந்த 3 நாட்களில் மொத்தம் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு “DrugFreeTN” என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியின் மூலம், கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அநாமதேயமாக (Anonymous) புகார் அளிக்கலாம். புகாரளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பழக்கத்தை குறைக்கும் நோக்குடன், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் வாங்குவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
— தூத்துக்குடி லீக்ஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக