செவ்வாய், 16 டிசம்பர், 2025

தூத்துக்குடி மாநகராட்சியில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மனுக்களுக்கு உடனடி தீர்வு – மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது

 தூத்துக்குடி டிச17

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (17.12.2025, புதன் கிழமை) கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது.

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks


முகாமில் பொதுமக்களிடமிருந்து சொத்து வரி தொடர்பான குறைகள், குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. 


உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகள் மற்றும் நிர்வாகச் சேவைகள் தொடர்பான குறைகளை நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெற்றனர். இவ்வாராந்திர முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, குறைகளுக்கு விரைந்து தீர்வு வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 15மனுக்கள் பொதுமக்கள் தரப்பில் பெறப்பட்டன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக