செவ்வாய், 16 டிசம்பர், 2025

தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்குவது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

 தூத்துக்குடி டிச 17,

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி உத்தரவின்படி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் கடந்த 15 தேதி முதல் வரும் 23ஆம் தேதி வரை அதிமுக தலைமை கழகமான சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் விருப்பமனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 

thoothukudileaks



அதை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்ட மன்ற  தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்கள் விருப்பமனு வழங்குவது குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி தெற்கு  மாவட்ட அதிமுக செயலாளரும்  முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில்  நேற்று 16.12.2025 மாலை மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.


thoothukudileaks


இதில்  பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதியில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் தலைமை கழகத்தால் வெளியிடப்பட்ட விருப்பமனுவில்  தங்களது முழு விவரங்களை பூர்த்தி செய்து, அத்துடன் விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15,000  வரையோலை செலுத்தி விண்ணப்பிக்க  வேண்டும் எனவும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த மூன்று தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் நாம் அனைவரும்  எடப்பாடி கே. பழனிசாமி நிற்பதாக கருதி முழுமூச்சுடன் பணியாற்றி அந்த வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் இதுவே நமது ஒரே இலக்கு 2026ல் மீண்டும் அம்மாவின் வழியில் புரட்சித் தமிழர் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும் அது ஒன்று தான் நமது குறிக்கோள் அதற்கு நாம் அயராது பாடப்பட வேண்டும்,  திமுக அரசு பொய்யான தேர்தல் வாக்குறுதி அளித்து   ஆட்சிக்கு வந்த பின் மக்களை கண்டுகொள்ளாத காரணத்தினால் வாக்களித்த மக்கள் அரசு ஊழியர்கள், வியாபாரிகள், மீனவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும்  இந்த திமுக ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளனர்.

 தமிழகத்திலேயே பெரிய கட்சி என்றால் அது அதிமுக தான் நம் கட்சி தொண்டர்களின் பலம் மற்றும் நம் கட்சி மீது மக்களிடம் உள்ள நம்பிக்கை மற்ற எந்த கட்சிக்கும் கிடையாது,  மக்கள் ஆதரவு நமக்கு நன்றாக உள்ளது அதை நாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், எனவே இன்று முதல் நாம் அனைவரும்  கடந்த கால அம்மாவின் வழியில் நல்லாட்சி நடத்திய எடப்பாடியாரின் நல்ல திட்டங்களை எடுத்துக் கூறியும்,   திமுக அரசினால் மக்கள் அன்றாடம் படும் இன்னல்களை மக்களிடம் நினைவூட்டியும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் எடப்பாடியார் வேட்பாளராக நிற்பதாக கருதி  வீடு வீடாக சென்றுவாக்கு சேகரிக்கும் பணியை தொடங்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் மாநில  அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கல் ஸ்டேனிஸ் பிரபு, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளரும் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான இரா.சுதாகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வை கிழக்கு ஒன்றிய கழக செயலாளருமான விஜயகுமார், மாவட்ட கழக துணைச் செயலாளர் வசந்தாமணி, மாவட்ட கழக பொருளாளர் சேவியர், ஒன்றிய கழக செயலாளர்கள் காசிராஜன், செம்பூர் ராஜ்நாராயணன், பூந்தோட்டம் மனோகரன், உரக்கடை குனசேகரன், அச்சம்பாடு சௌந்திரபாண்டி, அப்பாதுரை, தூத்துக்குடி பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சுடலைமணி, சந்தனபட்டு, நகர செயலாளர் காயல் யாசின், பேரூராட்சி கழக செயலாளர்கள் காசிராஜன், வேதமாணிக்கம், அசோக்குமார், அறிவுடைநம்பி பாண்டியன், அரசகுரு, குமரகுருபன், கோபாலகிருஷ்ணன், கிங்சிலிஸ்டார்லிங், வீரவெற்றிவேல், மாவட்ட பிற அணிச் செயலாளர்கள் எம்.பெருமாள், நடராஜன், பில்லா விக்னேஷ், டேக் ராஜா, ஜெ.ஜெ.தனராஜ், கே.ஜெ.பிரபாகர், சுதர்சன் ராஜா, வீரபாண்டியபட்டனம் சுரேஷ், மாவட்ட முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரு மணி, சுகந்தன் ஆதித்தன், வழக்கறிஞர்கள் முனியசாமி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மாமன்ற எதிர்கட்சி கொரடா மந்திரமூர்த்தி, மனுவேல்ராஜ், தெர்மல் ஆனந்தராஜ்,  ஜான்சன்தேவராஜ், மெஜூலா, ரம்யாநாராயணன், அங்கமங்கலம் பாலமுருகன், கந்தன், ஒய்.எஸ்.சுடலை, அணில்ராஜ், கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் ராஜ்குமார் அபிரகாம், ஜான்வில்லியம், கொம்பையா, சொக்கலிங்கம், பரிபூரணராஜா, யுவன்பால, பலஜெயம், சாம்ராஜ் மற்றம் சகாயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக