வெள்ளி, 7 நவம்பர், 2025

தமிழக முதல்வர் மனைவிக்கு எதிரான அநாகரிக கருத்து: பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி திமுக புகார்

Tamil Nadu updates,

 photo news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி, நவம்பர் 8 – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு எதிராக அநாகரிகமான வார்த்தைகளால் பேசிய பாஜக நிர்வாகிகள் மீது உடனடி நடவடிகை எடுக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் அணி தூத்துக்குடி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளது.



வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் ஆலோசனையின்படி, மாநகர திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வ லெட்சுமி தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது.

சம்பவத்தின் பின்னணி

கடந்த 3ஆம் தேதி கோவையில் நிகழ்ந்த மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, நவம்பர் 6ஆம் தேதி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் தெற்கு மாவட்ட பாஜக கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்தாரங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பாஜக மகளிர் அணி சார்பாக வட்டக்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் அனுசியா உரையாற்றினார்.

கோவை கல்லூரி மாணவி பாலியல் கொடூர சம்பவம் காரணமாக  3 குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் சுட்டு பிடித்து கைது நடவடிக்கை பின்பும் தமிழக அரசு  முதல்வர்  எதிராக வரிசையாக பேசிய பாஜக மகளிர் கள்  ...

இந்த வீடியோவில் பாஜக மகளிர்  அனுசூயா 

புகார் விவரம்

புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 

"தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் வெள்ளத்தாய், வடக்கு மாவட்ட அணி தலைவர் உமாசெல்வி மற்றும் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்தாரங்கன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில், அனுசியா பொய்யான தகவல்களையும், உண்மைக்கு புறம்பான அவதூறுகளையும் பரப்பும் வகையில் வன்மமான முறையில் பேசினார்.

அரசியலுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத குடும்பத் தலைவியான துர்கா ஸ்டாலினை கொச்சையான மற்றும் அநாகரிகமான வார்த்தைகளால் குறிப்பிட்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஆதாயம் தேடும் நோக்கத்தில் செயல்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கோரிக்கை மனு 

குற்றவியல் சட்டப்படி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்தாரங்கன், மகளிர் அணி தலைவர்கள் வெள்ளத்தாய், உமாசெல்வி மற்றும் பிரசார பிரிவு செயலாளர் அனுசியா ஆகியோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கோரப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆலோசனையின்படி போராட்டம்

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி கூறுகையில், "தமிழக முதலமைச்சரின் மனைவி மீது பேசிய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. 

அரசியல் பேச்சுக்கு ஒரு எல்லை உண்டு. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் ஆலோசனையின்படி விரைவில் இந்த செயலை கண்டித்து போராட்டம் நடைபெறும்" என்று தெரிவித்தார்.

புகார் மனு அளிக்கும் நிகழ்வில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மாநகர திமுக துணை செயலாளர் பிரமிளா, வழக்கறிஞர்கள் ரூப ராஜா, கிறிஸ்டோபர் விஜயராஜா, அமலா ஜெசிந்தா, அமுதவல்லி அனிதா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக